பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் சோதனை நடத்தப்படவில்லை: விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுதாரி
கோவை விமானப்படை பயிற்சி மையத்தில் பெண் அதிகாரி சக அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இரு விரல் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் இரு விரல் சோதனை உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட சோதனை ஆகும். ஆனால் இதனை இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர். சவுதாரி மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இரு விரல் சோதனை நடத்தப்படவில்லை என கூறியுள்ளார்.
கோவையில் செயல்பட்டு வரும் விமானப்படை பயிற்சி மையத்தில் பெண் அதிகாரி ஒருவர் விளையாட்டின் போது காயமடைந்துள்ளார். இதனால் தனது ஓய்வு அறைக்கு சென்றபோது சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக விமானப்படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
Also Read: சீனாவுடன் எல்லையில் பதற்றம்.. இலங்கையுடன் போர் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய இராணுவம்..
ஆனால் இதனை விமானப்படை அதிகாரிகள் சரியாக விசாரிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மேலும் தனக்கு இரு விரல் சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் குற்றவாளி அமித்தேஷ் ஹர்முக் மீது கோவை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Also Read: பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..?
குற்றவாளியின் மீது மகளிர் போலிசார் FIR பதிவு செய்துள்ளனர். குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விமானப்படை சார்பில் இந்த வழக்கை விமானப்படைக்கு மாற்ற கேட்டு கொண்டனர். 1950 சட்டப்பிரிவின் படி விமானப்படை அதிகாரிகளை நீதிமன்றம் விசாரிக்க முடியாது. இதனால் வழக்கை விமானப்படைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.