முஸ்லிம் அல்லாதவர்களும் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும்.. மருத்துவ கல்லூரி உத்தரவால் சர்ச்சை.

பங்களாதேஷில் உள்ள அட்-தின் சகினா மருத்துவ கல்லூரி தற்போது முஸ்லீம் அல்லாதவர்களும் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு பங்களாதேஷ் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிப்ரவரி 25 அன்று அட்-தின் சகினா மருத்துவ கல்லூரி இஸ்லாம் அல்லாத பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது. கல்லூரியின் இந்த முடிவுக்கு பங்களாதேஷ் ஜாதிய இந்து மஹாஜோட் அமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் தேசிய இந்து மகாஜோட் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பலாஷ் காந்தி டே கூறுகையில், கல்லூரியின் இந்த முடிவு வங்கதேச நீதிமன்றத்தின் 2010 தீர்ப்புக்கு முரணானது என கூறினார். 2010 தீர்ப்பில் நீதிமன்றம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் மக்கள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக ஹிஜாப், பர்தா மற்றும் பிற மத ஆடைகளை அணிய கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.

அனைவரும் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியதன் மூலம் மருத்துவ கல்லூரி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அஜிப் குரூப் லிமிடெட் நிறுவனம் நடத்தும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முஸ்லிம் அல்லாத மாணவிகளும் ஹிஜாப் அணிய கட்டாயமாக்கியுள்ளது.

மாணவர் சேர்க்கையின் போது கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிய மாணவர்களிடம் எழுத்துபூர்வமாக ஒப்புதல் வாங்குவதாகவும், மறுக்கும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சேர்க்கைக்கு தடை விதிப்பதாகவும் இந்து மகாஜோட் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தலையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அட்-தின் சகினா மருத்துவ கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஷேக் மொகியுதீனின் தந்தை டாக்டர் ஷேக் அகிஜ் உடின் நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரானவர் என கூறிய பங்களாதேஷ் தேசிய இந்து கிராண்ட் அலையன்ஸ் கூறியுள்ளது. ஷேக் அகிஜ் உதீன் ஜமாத்-இ-இஸ்லாமியின் மாணவர் பிரிவான சாத்ராவின் உறுப்பினர் எனவும், அவர் மருத்துவ கல்லூரி மாணவராக இருந்தபோது இந்து அகதிகளின் சொத்துக்களை சூறையாடியதாக குற்றம் சாட்டியுள்ளது.

பிப்ரவரி 18 அன்று, கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்காவிட்டால், வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தீவிர இஸ்லாமிய அந்தோலன் பங்களாதேஷ் கட்சி எச்சரிக்கை விடுத்தது.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஆதரவாக இஸ்லாமிய கட்சி டாக்காவில் பேரணி நடத்தியது. பேரணியின் போது இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய கும்பல் அல்லாஹு அக்பர் என்ற கோஷங்களையும் எழுப்பினர். ஹிஜாப் அணிய அனுமதிக்காவிட்டால் இந்துக்களை அச்சுருத்தும் அதேவேளையில் நாட்டில் இந்து பெண்களின் வாழ்க்கை பரிதாபமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு வங்கதேச இந்து பெண் கூட வீட்டிற்கு வெளியே வந்து இந்து மத அடையாளங்களுடன் தெருவில் நடக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தது. தீவிர இஸ்லாமிய அந்தோலன் பங்களாதேஷ் கட்சியின் இந்த பேச்சுக்கு பிப்ரவரி 25 அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பங்களாதேஷ் ஜாதிய இந்து மஹாஜோட் அமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.