உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக UU லலித்தை பரிந்துரைத்த NV ரமணா.. யார் இவர்?

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துள்ளார். தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் இந்த மாதம் 26 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்தியாவின் இரண்டாவது மூத்த தலைமை நீதிபதியாக 64 வயதாக யு.யு.லலித் இருப்பார். இருப்பினும் யு.யு.லலித் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார். அவருக்கு பிறகு நீதிபதி டிஓய் சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கலாம் என கூறப்படுகிறது.

நீதிபதி உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) நவம்பர் 9, 1957 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் பிறந்தார். இவரது தந்தை யு.யு.லலித் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் பெஞ்சில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றியவர். இந்திய உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1983 ல் வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கிய யு.யு.லலித் 1985 வரை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

பின்னர் 2004 ஆம் ஆண்டு வரை டெல்லியில் வழக்கறிஞராக பணிபுரிந்த நிலையில், ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்திய உச்ச நீதிமன்றத்தின் சட்ட பணிகள் குழுவின் உறுப்பினராகவும் இரண்டு முறை பணியாற்றியுள்ளார். ஆகஸ்ட் 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

யு.யு.லலித் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சார்பில் ஆஜரானார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனைத்து 2ஜி விசாரணையின் போது மத்திய புலனாய்வு பிரிவின் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடதை இடித்தது தொடர்பான வழக்கில் உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கு ஆதரவாக ஆஜரானார். அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு முக்கியமாக 2017 ஆம் ஆண்டு முத்தலாக் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என 3-2 பெரும்பான்மையுடன் அறிவித்த 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் யு.யு.லலித்தும் ஒருவராக இருந்தார்.

2021 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்ணின் தோல்-தோல் உரசியதால் அது போக்சோ சட்டத்தில் வராது என மும்பை உயர்நீதிமன்றத் தீப்பளித்தது. இது இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச், மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என கூறி அந்த தீர்ப்புக்கு தடை விதித்தார்.

யு.யு.லலித் முன்பு அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கு ஆதரவாக ஆஜராகிய நிலையில், அதனை முஸ்லிம் வழக்கறிஞர் குறிப்பிட்டதால், அயோத்தி தொடர்பான வழக்கின் பெஞ்சில் இருந்து விலகிக்கொண்டார்.

மேலும் குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு செல்லும் போது நாம் ஏன் காலை 9 மணிக்கு வரக்கூடாது. உச்சநீதிமன்றம் காலை 9 மணிக்கு அமர வேண்டும் என சமீபத்தில் கூறி இருந்தார். மேலும் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு 4 மாத சிறை தண்டனையை யு.யு.லலித் அமர்வு வழங்கியது.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளி முகமதுவிற்கு மரண தண்டனை வழங்கியது. ஆனால் அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஒவ்வொரு குற்றவாளிக்கும் எதிர்காலம் உண்டு என கூறியது. அந்த பெஞ்சில் யு.யு.லலித்தும் ஒருவராக இருந்தார்.

One thought on “உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக UU லலித்தை பரிந்துரைத்த NV ரமணா.. யார் இவர்?

  • August 5, 2022 at 1:42 pm
    Permalink

    MAKKALIN VARI PANATHAI KOLLAIYADITHAVARGAL YAARAAGA IRUNDAALUM AVARGAL CM PM GOVERNORS ATHIKAARIGAL THARPPINAR YAARAGHA IRUNDAALUM SATTAM YELLORUKUM ONRU THAAN.ITHILEY YEN KUDUMBATHIRKU VITHIVILLAKU KETTATHAIYUM ARIVEERGAL.ATHIL SILA URUPPINARGALAI SERPPEN.VILLAKKUVEN.AAGA INTHA 12000 KODI YAAR YAAR AATCHI KAALATHIL YENRU PAARTHAAL UPA ATHARKU MUNNAAL THARAPATTIRUKUM.AVARGAL ULLAASAMAGA VETTRU NAATTIL SUTTARALAM.AANAL PASI YEPPAKARAN SAAVAAN.PULIYEPPAKAREN VEEZHNDU SAAVAAN.YENTHA SATTAM ORU IRUTTARAI YENRU SONNATHO AVARGAL VAZHI NIRPPAVARGAL MIGA MIGA KU RAI VU YENAPATHU MATTUM YENNAAL THELIVAAGA SOLLAMUDIYUM.INTHA ANAATHAIYIN THOL MEL KAIPOTTU KONDU KANIMALATHINAI KOLLAIYADIKKUM ORUVANUKKU OUT HOSPITAL POGA SATTATHIL VAZHIYIRUNDAL ACCHATTAM DANGEROUS MATTUMALLA ATHARKU VAZHIVAGUTHA NEETHIPATHIYUM DANGEROUS THAAN YENA NAAN KOORA KADAMAI PATTULLEN.IPPOTHU YEN PAKKAM YAAR YAAR.ANTHA KD YIN PAKKAM YAAR YAAR?

    Reply

Leave a Reply

Your email address will not be published.