கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஜி ஜின்பிங் முன்னிலையில் முன்னாள் சீன அதிபரை வெளியேற்றிய அதிகாரிகள்.. ஏன்..?

நேற்று நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவு விழாவில் முன்னாள் சீன அதிபர் ஹு ஜின்டாவோ, எதிர்பாராத வகையில் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது சர்வதேச அளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மாநாட்டில் ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

80 வயதான முன்னாள் சீன அதிபர் ஹு ஜின்டாவோ, தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அருகில் அமர்ந்திருந்தார். அப்போது இரண்டு பணியாளர்கள் ஹு ஜின்டாவோவை மேடையில் இருந்து அழைத்து சென்றனர். வீடியோவில் ஒரு பணியாளர் ஹுவை பலமுறை மேடையில் இருந்து வெளியேற்ற முயற்சித்தார்.

பணியாளர்கள் அவரை தன்னை வெளியேற்றும் போது ஹு அதனை எதிர்த்தார். பின்னர் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார். பின்னர் பணியாளர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பணியாளர்கள் அழைத்து செல்லும் போது ஹு சீன அதிபர் ஜி ஜின்பிங் தோளில் கை வைத்து தட்டினார்.

இருப்பினும் பணியாளர்கள் அவரை வெளியேற்றினர். ஹு ஜின்டாவோவுக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை வெளியேற்றியதற்கு எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் ஜி ஜின்பிங்கின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இந்த சம்பவம் எடுத்துகாட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவு விழாவில் கிட்டத்தட்ட 2,300 பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில், கட்சியின் முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமினும் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவோ வெளியேறியது சர்வதேச அளவில் சர்ச்சை ஆன நிலையில் சீன ஊடகங்கள் இதை பற்றி பேசவில்லை.

முன்னாள் அதிபர் வெளியேற்றப்பட்ட வீடியோ சீன ஊடகத்தால் எடுக்கப்பட்டவை அல்ல, அவை சர்வதேச ஊடகங்களால் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை. இதற்கு தற்போது சீன ஊடகங்கள் விளக்கம் அளித்துள்ளன. முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவோவிற்கு உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுப்பதற்காக அவரை ஊழியர்கள் அழைத்து சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

One thought on “கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஜி ஜின்பிங் முன்னிலையில் முன்னாள் சீன அதிபரை வெளியேற்றிய அதிகாரிகள்.. ஏன்..?

  • October 24, 2022 at 7:37 am
    Permalink

    திராவிட ஊடகமோ என்னமோ

    Reply

Leave a Reply

Your email address will not be published.