எண்ணெய் மற்றும் உணவு நெருக்கடி.. ரஷ்யா மீதான தடையை நீக்கும் ஐரோப்பிய யூனியன்..?

ரஷ்யா மீது ஐரோப்பா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் புதிதாக மேலும் பல தடைகளை விதிக்க தயாராகி வருகிறது. ஆனால் இதனை பல ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. இதனால் ரஷ்யா மீதான தடை நீங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து ரஷ்யாவை தனிமைபடுத்த ஐரோப்பிய நாடுகள் முயற்சித்தன. இருப்பினும் ஐரோப்பிய நாடுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்விலேயே முடிவடைந்தது. ஏனெனில் இந்த ஆண்டு ரஷ்யாவின் ரூபிள் சிறந்த செயல்திறன் நாணயமாக வெளிப்பட்டுள்ளது.

இதனால் ஐரோப்பிய மற்றும் மற்ற நாடுகள் விதித்த தடையில் இருந்து எளிதாக ரஷ்யா மீண்டு வந்துள்ளது. அதன் பொருளாதாரமும் தன்னிறைவு அடைந்துள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிக்க உள்ளது. அவை ரஷ்யாவின் வங்கிகள், ஆலோசனை சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை குறிவைத்துள்ளது.

முக்கியமாக ரஷ்ய எண்ணெயை தடை செய்வதாகும். ஆனால் ஐரோப்பாவின் பல நாடுகள் இந்த தடைக்கு எதிராக உள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவில் இருந்து கடல் வழி மற்றும் குழாய் வழியாக எண்ணெய் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் பல ஐரோப்பிய நாடுகள் கடல் வழியாக எண்ணெயை தடை செய்ய ஒப்புக்கொண்ட நிலையில், குழாய் வழியான தடைக்கு எதிராக உள்ளன.

கடந்த ஆண்டு ரஷ்யா குழாய் வழியாக ஐரோப்பிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 720,000 பீப்பாய்களை அனுப்பியது. ஆனால் அதன் பால்டிக், கருங்கடல் மற்றும் ஆர்டிக் துறைமுகங்களில் இருந்து ஒரு நாளைக்கு 1.57 மில்லியன் பீப்பாய்களை அனுப்பியது. குழாய் வழியுடன் ஒப்பிடும் போது கடல் வழியாக மிகக் குறைவாகவே எண்ணெய் அனுப்பப்படுகிறது.

எண்ணெய் தவிர தற்போது ஐரோப்பா உணவு நெருக்கடியையும் எதிர்கொள்கிறது. ஐரோப்பா அதன் கோதுமையை உக்ரைனில் இருந்து தான் பெரும்பாலும் இறக்குமதி செய்கிறது. மேலும் உக்ரைனின் உணவு ஏற்றுமதியை ரஷ்யா தடுத்துள்ளது. இதனால் ஐரோப்பாவில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அமெரிக்காவின் டாலருக்கு பதிலாக ரஷ்யாவின் ரூபிளை பயன்படுத்தி எண்ணெய் வாங்க வேண்டும் என ரஷ்யாவின் கோரிக்கையை ஐரோப்பா ஏற்றுக்கொண்டுள்ளது.

Also Read: உக்ரைன் ரஷ்யா மோதல்.. நார்ட் ஸ்ட்ரீம் திட்டத்தை செயல்படுத்த ஐரோப்பா முடிவு..?

சவுதி அரேபியா மற்றும் உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் மீது ரஷ்யா ஏற்கனவே பெரும் செல்வாக்கை செலுத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவிற்கு மாற்றாக எண்ணெய் இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகளுக்கு வேறு எந்த நாடும் இல்லை. இந்த நிலையில் ரஷ்யா மீதான தடையை நீக்கினால் உக்ரைன் மற்றும் ஐரோப்பா இடையே உணவு பாதையை உருவாக்க முன்வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Also Read: சீனா மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானை தாக்குவதற்கு சமம்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியாவும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவிற்கு மாற்றாக கோதுமை இறக்குமதிக்கு தற்போதைக்கு வேறு நாடு இல்லை. இதனால் ஐரோப்பா ரஷ்யா மீதான தடையை நீக்குவதற்கு மறுபரீசிலனை செய்து வருகிறது. இதன் மூலம் எண்ணெய் மற்றும் உணவு இரண்டு பிரச்சனைகளில் இருந்தும் ஐரோப்பா விடுபட முடியும்.

Also Read: பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது: ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published.