சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஓலா.. முதல் நாளிலேயே அதிக வரவேற்பு.. பெண்களுக்கு முன்னுரிமை..
தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலை முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் ஓலா நிறுவனம் இரண்டு புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ ஆகும்.
இவை சந்தையில் 1 லட்சம் மற்றும் 1,30,000 என்ற விலையில் கிடைக்கும். விநாயகர் 8 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்காக ஓலா நிறுவனம் 2,400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்த தொழிற்சாலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சந்தையின் தேவையை பொருத்து 20 லட்சம் வாகனம் வரை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் கூறுகையில் ஓலா நிறுவனம் எதிர்காலத்தில் பெண்களால் நடத்தப்படும் என கூறினார். ஆத்மநிர்பார் பாரதத்திற்கு ஆத்மநிர்பார் பெண்கள் தேவை, நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியமானது என கூறினார்.
ஓலா நிறுவனம் 10,000 மேற்பட்ட பெண்களை வேலைக்கு எடுக்க உள்ளது. அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதே எங்களது நோக்கம். பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறும் போது அவர்களது வீடும் நாடும் முன்னேற்றம் அடையும் என பவிஷ் அகர்வால் கூறினார்.
ஓலா நிறுவனம் கடந்த மாதமே தனது முன்பதிவை தொடங்கியது. 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.