இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி.. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அறிவிப்பு..?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிந்து பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 2028 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ளது.
2032 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்தில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 2036 மற்றும் 2040 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்று இந்தியாவில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் கூறுகையில், 2036 மற்றும் 2040 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளதாக கூறினார். இந்தியா மட்டுமில்லாமல் இந்தோனேசியா, கத்தார், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஆர்வமாக உள்ளதாக தாமஸ் பாக் கூறியுள்ளார்.
2036 மற்றும் அதற்கு பிறகும் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளதாக இந்திய ஒலிம்பிக் கமிட்டி செயலாளர் நாயகம் ராஜீவ் மேத்தா கூறினார். மேலும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறிகையில், 2048 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டை முன்னிட்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான முயற்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என கூறினார்.
இந்தியாவில் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும், விளையாட்டு துறையில் நடைபெற்ற ஊழல் காரணமாகவும் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறாமல் இருந்து வந்தன. ஆனால் தற்போது மோடி ஆட்சியின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி படுத்தப்பட்டு பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்து வருவதால் எதிர் காலத்தில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.