அவர்களின் கோடாரியை விட நமது பேனா வலிமையானது.. நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த கீர்ட் வில்டர்ஸ்

முகமது நபி பற்றிய உண்மையை பேசிய நுபுர் சர்மாவை ஆதரிப்பதற்காக மக்கள் மிரட்டப்படுவதை ஏற்று கொள்ள முடியாது என நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் கீர்ட் வில்ட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி தொடர்பாக பேசியது சர்ச்சையானதை அடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் நுபுர் சர்மாவிற்கு கொலை மிரட்டலும், கற்பழிப்பு மிரட்டலும் விடுக்கப்பட்டன.

நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பதிவிட்டதற்காக ராஜஸ்தானின் உதய்பூரில் கன்ஹையா லால் என்ற நபர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். முன்னதாக இதற்கு பதிலளித்த கீர்ட் வால்ட்டர்ஸ், உதய்பூர் கொலைக்கு நுபுர் சர்மா பொறுப்பல்ல என தெரிவித்து இருந்தார்.

மேலும் உதய்பூர் கொலைக்கு தீவிர சகிப்புத்தன்மையற்ற ஜிகாதி முஸ்லிம்கள் தான் பொறுப்பு, வேறு யாரும் இல்லை. நுபுர் சர்மா ஒரு ஹீரோ என கூறி இருந்தார். இந்த நிலையில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பதிவிடுபவர்களுக்கு தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதை கீர்ட் வில்டர்ஸ் கண்டித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், முகமது நபி பற்றிய உண்மையை பேசிய நுபுர் சர்மாவை ஆதரிப்பதற்காக மக்கள் அச்சுறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் கோடாரியை விட நமது பேனா வலிமையானது என்பதை உலகுக்கு காட்டுவோம்.

பேச்சு சுதந்திரம் பற்றிய உங்கள் எண்ணங்கள் மற்றும் வரைபடங்களை எனக்கு DM மூலம் அனுப்புங்கள். சிலவற்றை நான் வெளியிடுகிறேன் என பதிவிட்டுள்ளார். கீர்ட் வில்டர்ஸ் நபிகள் தொடர்பான சர்ச்சை உருவானதில் இருந்தே நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார். இதனால் கீர்ட் வில்டர்ஸ்க்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.