பாக். இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் புதுப்பிப்பு.. இந்தியாவில் இருந்து சென்ற பக்தர்கள்..

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான மகாராஜா பரம்ஹன்ஸ் ஜீ கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு இந்தியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து பக்தர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சனிக்கிழமை கோவலில் வழிபாடு செய்தனர்.

வழிபாடு நடத்த வந்த இந்துக்களின் தூதுகுழுவில் இந்தியாவில் இருந்து 200 பக்தர்கள், துபாயில் இருந்து 15 பக்தர்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுக்ளை சேர்ந்தவர்கள். இந்து பக்தர்கள் வாகா எல்லை வழியாக கடந்து ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களால் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்க்வாவின் காரக் மாவட்டத்தில் தேரி கிராமத்தில் உள்ள மகாராஜா பரம்ஹன்ஸ் ஜி கோவில் டிசம்பர் 30, 2020 ஆம் ஆண்டு ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்வின் (JUI-F) மதவாத கும்பலால் கோவில் மற்றும் மகாராஜா சமாதி இடிக்கப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்த கோவில் இதற்கு முன் 1997 ஆம் ஆண்டும் இடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜமியத் ந்லமா-இ-இஸ்லாம் ஃபஸ்வின் கும்பலிடம் 3.3 கோடி ரூபாயை அம்மாகாண அரசு வசூல் செய்து மகாராஜா பரம்ஹன்ஸ் ஜி கோவிலை மீண்டும் புதுப்பித்துள்ளது. இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் வழிபாடு நடத்துவதற்கு பாகிஸ்தான் இன்டர்நேஷ்னல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பாகிஸ்தான் இந்து கவுன்சில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

Also Read: இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும்: கர்நாடக முதல்வர் அறிவிப்பு

அன்றைய தினம் தேரி கிராமத்தில் பாதுகாப்பு படையினர், உளவுத்துறை மற்றும் விமானநிலைய பாதுகாவலர்கள் என சுமார் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த வழிபாடு மற்றும் சடங்குகள் ஞாயிற்றுகிழமை மதியம் வரை நடந்ததாக இந்து கவுன்சில் அதிகாரிகள் கூறினர். கோவிலில் உள்ள திறந்தவெளி வரவேற்பு அறைகள் பக்தர்களுக்கான தங்குமிடங்களாக மாற்றப்பட்டன.

Also Read: அன்னை தெரேசா அறக்கட்டளையின் வங்கி கணக்கு முடக்கம்..? மதமாற்றம் காரணமா..? கொந்தளித்த மம்தா பானர்ஜி..

கோவிலுக்கு அருகில் உள்ள சந்தைகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பியது. இந்து குழுவை சேர்ந்த குழந்தைகள் உள்ளூர் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவதை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் சடங்குகள் முடிந்த உடன் அனைவரும் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதே தேரி கிராமத்தில் 1919 ஆம் ஆண்டு மகாராஜ் பரம்ஹன்ஸ் ஜி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 6 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது..?

Leave a Reply

Your email address will not be published.