மியான்வாலியில் விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானம்..
பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சி விமானம் மியாவாலியில் இன்று விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக விமானி வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று மியாவாலியில் வழக்கமான பயிற்சியின் போது போர் விமானம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. விமானி பாராசூட் மூலமாக போர் விமானத்தை விட்டு வெளியேறினார். விபத்திற்கான காரணங்களை ஆராய விமான தலைமையகம் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.
பாகிஸ்தானின் போர் விமானங்கள் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் இந்த ஆண்டு மார்ச் மாதம் பெஷாவர் அருகே வழக்கமான பயிற்சியின் போது பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். மேலும் அதற்கான காரணத்தை கண்டறிய அப்போது விசாரணை குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில் கில்கிட் பல்டிஸ்தானின் சியாச்சின் பகுதியில் பாகிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதிதல் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல் 2020 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் விமானப்படையின் F-16 போர் விமானம் ஷகர்பரியன் அருகே மார்ச் 23 பாகிஸ்தான் தின அணிவகுப்பு ஒத்திகையின் போது விபத்தில் சிக்கியது.
Also Read: ஆப்கன் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு..
இந்த விபத்தில் இராணுவ விமானி உயிரிழந்தார். அதே 2020 ஆம் ஆண்டு குஜராத்தில் போர் விமானம் விபத்தில் சிக்கியதில் இரண்டு இராணுவ விமானிகள் உயிரிழந்தனர். இதில் பைலட் மேஜர் உமர் மற்றும் லெப்டினன்ட் பைசான் ஆகிய இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
Also Read: ஏவுகணை, ராக்கெட் பற்றிய தகவல்களை பாக். ஏஜென்டுக்கு அனுப்பிய இந்திய இராணுவ வீரர்..