TTP பயங்கரவாதிகளை தாக்கி பணைய கைதிகளை மீட்ட பாகிஸ்தான் இராணுவம்..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் பன்னுவில் உள்ள CTD (Counter-Terrorism Department) மையத்தில், ஞாயிறு அன்று போலிசாரை தாக்கி அவர்களை TTP அமைப்பினர் சிறைப்பிடித்தனர்.

தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினர் 10க்கும் மேற்பட்ட போலிசாரை சிறைப்பிடித்தனர் மற்றும் டஜன் கணக்கான ஆயுதங்கள், வாகனங்களும் சிறைப்பிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்கையில் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்ட போலிசாரை விடுவிக்க கோரினர்.

TTP தரப்பில் ஆப்கானிஸ்தான் செல்வதற்கு பாதுகாப்பான பாதையை வழங்குமாறு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து பாகிஸ்தான் இராணுவத்தின் SSG பிரிவு களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் பன்னுவில் உள்ள CTD தளத்தில் பணைய கைதிகளை மீட்டு, 10 TTP பயங்கரவாதிகளை கொன்றனர்.

மேலும் 7 TTP பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த CTD தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவம் சீன ஆளில்லா தாக்குதல் விமானத்தை பயன்படுத்தியது.

நாளுக்கு நாள் பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினரின் தாக்குதல் அதிகமாகி வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவத்திற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *