2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை: அமெரிக்கா அறிக்கை

2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசார் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் சஜித் மிர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், ஆனால் இந்தியாவை குறிவைக்கும் மசூத் அசார் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஐநாவால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வெளியுறவு ஆய்வறிக்கை 2020ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் குழுக்களான தாலிபான்கள், ஹக்கானி நெட்வொர்க் மற்றும் இந்தியாவை குறிவைக்கும் குழுக்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதத்தில் லாகூர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபிஸ் சயீத்தை பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்ததாக கூறி அவருக்கு 5.6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இருப்பினும் மசூத் அசார் மற்றும் சஜித் மிர் போன்ற பயங்கரவாதிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவனை சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவம்..

வியாழன் அன்று வெளியிடப்பட்ட பயங்கரவாதம் குறித்த 2020 ஆய்வறிக்கையில், அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவதாக கூறியுள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தல்களை இந்திய பாதுகாப்பு முகமைகள் முறியடித்தாலும், இடைநிலை உளவுத்துறை மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றில் இடைவெளி இருப்பதாக கூறியுள்ளார்.

Also Read: மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு.. மே.வங்கத்தில் 20 வெடிகுண்டுடன் இராணுவ முகாமை நோக்கி சென்ற நபர் கைது..

UNSCR 2309யை செயல்படுத்துவதில் இந்தியா அமெரிக்காவுடன் ஒத்துழைத்து வருவதாகவும், விமான நிலைய சரக்கு பகுதியில் இரட்டை திரை எக்ஸ்ரேவை செயல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் வரை ISIS உடன் தொடர்புடைய இந்தியாவை சேர்ந்தவர்கள் 66 பேர் இருப்பதாகவும், அவர்கள் யாரும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் FATFல் சாம்பல் நிற பட்டியலிலேயே இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read: S-500 ஏவுகணை அமைப்பை முதல் நாடாக வாங்குகிறது இந்தியா..? ரஷ்ய துணை பிரதமர் அறிவிப்பு..

Leave a Reply

Your email address will not be published.