குறைந்த கல்வியறிவு திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் பின்தங்கிய பாகிஸ்தான்.. GII அறிக்கை..
குளோபல் இன்னோவேஷன் இன்டக்ஸ் 2021ல் 132 பொருளாதார நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 99வது இடத்தை பிடித்துள்ளது. இது நாட்டில் குறைந்த கல்வியறிவு விகிதம், மோசமான வேலை பயிற்சி மற்றும் கல்வியில் குறிப்பிடத்தக்க முதலீடு இல்லாததால் புதுமை பற்றாக்குறையை பாகிஸ்தான் எதிர்கொள்வதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.9 சதவீதத்தை கல்விக்காக செலவிடுகிறது. மேலும் பாகிஸ்தான் ஆசியாவிலேயே குறைந்த கல்வியறிவு விகிதத்தை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போதைய கல்வியறிவு விகிதம் 51.7 சதவீதமாக இருக்கும் நிலையில், பெண்களின் கல்வியறவு விகிதம் 51.7 சதவீதமாக உள்ளது.
குறைந்த எழுத்தறிவு திறன் கொண்ட நபர்கள் உயர்கல்வி, வேலை பயிற்சி மற்றும் தொழிலாளர் சந்தை ஆகியவற்றிற்கு குறைவாகவே தயார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி, வலுவான உள்கட்டமைப்பு மற்றும் புதுமையான செயல்பாடுகளில் பாகிஸ்தான் அரசால் முதலீடு செய்ய முடியவில்லை.
இதில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் கல்வியறிவு திறனை மேம்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மனித மூலதனம் மற்றும் ஆராய்ச்சியின் கீழ் பாகிஸ்தான் 117வது இடத்தில் உள்ளது. கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் அமெரிக்கா முதல் மூன்று இடத்தில் உள்ளன.
Also Read: இந்தியாவின் பார்வையில் பொம்மை பிரதமர்.. இம்ரான்கானை கடுமையாக விமார்சித்த நவாஸ் ஷெரிப்..
ஆசியாவில் வியட்நாம் 44வது இடத்திலும், இந்தியா 46வது இடத்திலும், ஈரான் 60வது இடத்திலும் உள்ளன. மனித மூலதன குறியீட்டில் 157 நாடுகள் கொண்ட பட்டியலில் பாகிஸ்தான் 134வது இடத்தில் உள்ளன. மனித மூலதனம் என்பது கற்றல், கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் மதிப்பிடப்படுகிறது.
மனித மூலதனத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தின் அளவு மற்றும் தரம் நாட்டில் மோசமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வியறிவு திறனை வளர்ப்பதற்காக மனித மேம்பாட்டுக்கான தேசிய ஆணையம் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் அரசு நிறுவியது. இருப்பினும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Also Read: பாகிஸ்தானிடம் கடனை திருப்பி கேட்கும் சீனா.. திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான்..