மின் பற்றாக்குறையால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. மக்கள் போராட்டம்..

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுகிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். டோர்காம் எல்லைக்கு செல்லும் சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தை நடத்தினர். தினமும் 14 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

கைபர் பக்துன்வாவில் ஷா காஸ் அருகே டோர்காம் சாலையை மறித்து பொதுமக்கள் மின்சார துண்டிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் புர்கா அணிந்து பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சமீபத்தில் இம்ரான்கான் எரிவாயு மற்றும் மின்சார விலையை உயர்த்தி இருந்தார்.

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் போன்ற காரணங்களால் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்வெட்டுக்கு எதிரான பதாகையுடன் சாலையில் கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், அதிகபடியான எரிவாயு மற்றும் மின்சார தடைகளால் வீட்டை பராமரிக்க முடியவில்லை என்றும், உணவை தயாரிக்க பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் கூறியுள்ளனர். லக்கி மார்வாட் நகரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ஆதரவு..?

தாங்கள் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கு ஆயிரகணக்கான ரூபாய் செலுத்தி வருகிறோம். ஆனால் தினமும் 14 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்தலுக்கு பிறகு இஸ்லாமாபாத்திலேயே இருப்பதாக சாடியுள்ளனர். தற்போது பொருளாதார நெருக்கடியால் நாடு எரிவாயு மற்றும் மின் உற்பத்தி பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

Also Read: சவுதி தூதரை அவமதித்த பாகிஸ்தான் அமைச்சர்.. இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம்..

பின்னர் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கவே தாலுகா தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டு உயர்மட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். மேலும் இனி இதுபோல் நடக்காது என சம்பந்தப்பட்ட பெஷாவர் மின்சார சப்ளை கார்ப்பரேஷன் மற்றும் மாவட்ட நிர்வாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர்.

Also Read: பாக். இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் புதுப்பிப்பு.. இந்தியாவில் இருந்து சென்ற பக்தர்கள்..

Leave a Reply

Your email address will not be published.