இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது..

இந்தியாவில் சதிசெயலுக்கு திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானை சேர்ந்த முகமது அஷ்ரப் என்பவரை டெல்லி போலிசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் போலி முகவரியை உருவாக்குவதற்காக முகமது அஷ்ரப் தங்கி இருந்துள்ளார். மேலும் பண்டிகை காலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக டெல்லி போலிசார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த முகமது அஷ்ரப் வங்கதேச எல்லையில் உள்ள சிலிகுரி வழியாக இந்தியா வந்துருக்கலாம் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் பீகார் முகவரியை போலியாக தயாரித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து பீகாரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பயங்கரவாத செயலுக்காக போலி முகவரியை தயாரிக்க டெல்லியில் தங்கி இருந்த போது போலிசார் கைது செய்துள்ளனர்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச்சூட்டில் 5 இராணுவ வீரர்கள் வீரமரணம்..

அவரது வீட்டில் இருந்து போலியான அடையாள அட்டை, ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. முகமது அஷ்ரப் 5 அல்லது 6 முகவரிக்கு மேல் மாற்றப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அவரது பாஸ்போர்ட் 2014 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதை போலிசார் தெசிவித்துள்ளனர்.

Also Read: காஷ்மீர் பண்டிட் படுகொலை எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் 570 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை..

இந்த நிலையில் முகமது அஷ்ரப்பை கைது செய்த பொலிசார் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக 14 நாட்கள் காவவில் எடுத்துள்ளனர்.

Also Read: தமிழகத்தின் மதுரையில் ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்தது NIA.. பாய்ந்தது UAPA..

Leave a Reply

Your email address will not be published.