ஜி ஜின்பிங்கை கேலி செய்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்.. வீடியோ வெளியானது..
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விமர்சித்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. குரேசி ஏற்கனவே சவுதி துதரை அவமதித்து சர்ச்சையில் சிக்கியவர்.
சீனாவின் பயண தடை குறித்து கேட்பதற்காக பாகிஸ்தான் மாணவர் ஒருவர் குரேசியை அணுகினார். அப்போது மாணவர் மலேசியாவில் இருந்து வரும் நபர்கள் சீனாவிற்கு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானியர்கள் சீனாவிற்கு திரும்ப ஏன் அனுமதிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த குரேசி, ஜி ஜின்பிங் கூட எங்கும் செல்வதில்லை, கடந்த 24 மாதங்களாக சீனாவை விட்டு வெளியேரவே இல்லை. இன்னும் சில மாதங்கள் அவர் சீனாவிலேயே இருக்கலாம் என கூறினார்.
கொரோனா பரவ தொடங்கிய 2020 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானியர்கள் சீனாவுக்குள் நுழைய தடை உள்ளது. இதனால் பாகிஸ்தான் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் சீன பல்கலைகழகங்களில் சுமார் 28,000 மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
சீனாவிற்கு மீண்டும் செல்லவில்லை என்றால் அவர்களின் கல்வி பயனற்றதாகி விடும் என பாகிஸ்தான் மாணவர்கள் அஞ்சுகின்றனர். ஏனெனில் பணியிடத்தில் பயிற்சி இல்லாமல் பெறப்பட்ட வெளிநாட்டு மருத்துவ தகுதிகள் பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்படாது.