பாகிஸ்தானின் மொத்த கடன் 12 டிரில்லியன் ரூபாயாக அதிகரிப்பு..!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பாகிஸ்தானின் மொத்த கடன்கள் 12 டிரில்லியன் ரூபாய் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு குறைவு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஆகியவற்றால் பாகிஸ்தானின் கடன் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2022-2023 நடப்பு நிதியாண்டான ஜூலை-செப்டம்பரில் பாகிஸ்தானின் கடன் 62.46 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 50.49 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் 18.7 சதவீதம் அதிகரித்து 31.40 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் அறிக்கையின்படி, 2022-2023 ஜூலை-செப்டம்பர் வரையிலான நிதியாண்டில் வெளிநாட்டு கடன் 17.99 டிரில்லியன் ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30.2 சதவீதம் அதிகமாகும். டாரஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் முஸ்தபா முஸ்தான்சீர் கூறுகையில், கடன் பொறுப்புகளை நிர்வகித்தல் என்பது அரசாங்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சீனாவிடம் இருந்தே அதிக கடன்களை வாங்கியுள்ளது. சீனா தவிர சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்தும் பாகிஸ்தான் கடன் வாங்கியுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் மேலும் கடன் கேட்டுள்ளது. தற்போது சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடனை அடைக்க சீனாவிடமே மீண்டும் கடன் கேட்டுள்ளது.

சமீபத்தில் தான் பாகிஸ்தான் FATF ன் சாம்பல் நிற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பாகிஸ்தான் நீக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்து இருந்தது. சாம்பல் நிற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்குவது எளிது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.