இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவில்லை என்றால் இன்று ஜல் சமாதி அடைய உள்ளதாக பரமஹான்ஸ் ஆச்சார்ய மகாராஜ் அறிவிப்பு..
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க கோரி புகழ்பெற்ற ஜகத்குரு பரமஹான்ஸ் ஆச்சார்ய மகாராஜ் இன்று அயோத்தியின் சரயு நதியில் ஜல் சமாதி அடைய உள்ளதாக கூறியுள்ளார். இது உத்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அக்டோபர் 2 அஇம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் அயோத்தியில் ஜல் சமாதி அடைய உள்ளதாக ஆச்சார்ய மகாராஜ் அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி இன்று அக்டோபர் 2 ஆம் தேதி என்பதால் அயோத்தியின் சரயு நதியில் கூட்டம் கூடியுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆச்சார்ய மகாராஜ் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளியே செல்ல போலிசார் அனுமதிக்கவில்லை என சில தனியார் செய்தி சேனல்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
போலிஸ் அதிகாரிகள் ஆச்சார்ய மகாராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஒருமித்த முடிவு எட்டப்பட்டவுடன் மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை முன்வைத்து ஆச்சார்ய மகாராஜ் சில மாதங்களுக்கு முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
Also Read: “ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம்” 140 நாடுகளை இணைக்கும் பிரதமர் மோடியின் சூரியஒளி திட்டம்..
அந்த முயற்சி போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பிற்கு 15 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டிற்கு பிறகு அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். தற்போது ஜல் சமாதி அடைய உள்ளதாக கூறியுள்ள நிலையில் போலிசார் அவரை வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
Also Read: இந்தியா எங்களின் மிக முக்கியமான நண்பன்.. சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவை ஆதரிக்கிறோம்: பெலாரஸ்
ஜல் சமாதி என்பது ஒரு நபர் தண்ணீரில் மூழ்கி தனது வாழ்க்கையை முடித்து கொள்வது ஆகும். இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவில்லை என்றால் தனது வாழ்க்கையை அயோத்தியின் சரயு நதியில் முடித்துக்கொள்ள உள்ளதாக ஆச்சார்ய மகாராஜ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..