பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் குறைவாக தேநீர் அருந்த வேண்டும்: பாகிஸ்தான் அமைச்சர்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாகிஸ்தான் மக்கள் குறைவாக தேநீர் அருந்துமாறு பாகிஸ்தான் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. அங்கு அத்தியாவசிய மற்ற பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரத்தை மிச்சப்படுத்த வாரத்தில் 5 நாட்கள் வேலை, 8 மணிக்கு மேல் கடைகளை அடைக்க உத்தரவு, 10 மணிக்கு மேல் கல்யாண விழாக்களை நடத்த தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அஹ்சன் இக்பால் கூறுகையில், பாகிஸ்தான் தேயிலையை இறக்குமதி செய்கிறது, அதற்கான நாடு கடன் வாங்க வேண்டி உள்ளது. நாடு தேயிலை உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வரை மக்கள் தேநீர் அருந்துவதை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சக தகவலின்படி, உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதியாளராக பாகிஸ்தான் உள்ளது. கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டு சுமார் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான தேயிலையை இறக்குமதி செய்துள்ளது. தேயிலையை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

நாங்கள் கடனில் தேயிலையை இறக்குமதி செய்வதால், தேயிலை குடிப்பதை ஒன்று முதல் இரண்டு கப் வரை குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என அமைச்சர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் டாலர கையிருப்பு குறைந்து வருவதால், இறக்குமதி செலவுகளை குறைக்கவும், நிதியை சேமிக்கவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Also Read: பசுவை வணங்கும் இந்துக்களை பாகிஸ்தான் முஸ்லிம்கள் தாக்க வேண்டும்: பாலஸ்தீன மதகுரு

அமைச்சரின் அறிவிப்பு நெட்டிசன்கள் இடையே விமர்சனத்தை பெற்றுள்ளது. பயனர் ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் அரசு ஒன்றும் இலவசமாக தேநீர் கொடுக்கவில்லை. நாங்கள் உட்கொள்ளும் தேநீர்க்கு பணம் செலுத்துகிறோம். பணம் கொடுத்து தான் தேநீர் அருந்துகிறோம். இதில் எந்த சமரசமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Also Read: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான நிதியை 50% குறைத்த பாகிஸ்தான் அரசு..

இன்னொருவர், நாம் இடைநிலை நோன்பையும் முயற்சி செய்யலாம். எனவே நாம் ஒன்றாக உண்பது, குடிப்பதை நிறுத்துவோம். எதிர்காலத்தை பற்றிய உங்களின் பார்வை மிகவும் உற்சாகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு பிப்ரவரியில் 16 பில்லியன் டாலராக இருந்த நிலையில், ஜூன் முதல் வாரத்தில் 10 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் ஒருவர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

Also Read: கட்டிடங்கள் மீது விழுந்து விபத்தில் சிக்கிய சீன போர் விமானம்.. பதற்றத்தில் மக்கள்..

Leave a Reply

Your email address will not be published.