ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல்..? விலை குறைய வாய்ப்பு உள்ளதா..?

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டுவர நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகு அதனை வரும் வெள்ளிகிழமை GST கூட்டத்தில் பரிசீலனை செய்ய உள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான குழு கூறியுள்ளது.

நாம் அதிகமாக இறக்குமதி செய்யும் பொருட்களில் எரிபொருட்களும் ஒன்று. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாகியுள்ளது. ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவதற்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு தேவை.

பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவதற்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வருவது மத்திய அரசுக்கு சவாலாகவே இருக்கும். ஏனென்றால் ஒருசில மாநிலத்தின் முக்கிய வருவாயாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியே உள்ளது.

இந்தியா அதிகமாக எரிபொருளை இறக்குமதி செய்வதால் அது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் தாக்கம் நுகர்வோரை பாதிக்கிறது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் எரிபொருளின் விலையும் உயர்வதால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

இதனாலயே எரிபொருளை ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டுவர மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றம் பரிந்துரை செய்தாலும் இறுதி முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் மட்டுமே எடுக்கும். ஜிஎஸ்டி கூட்டத்தில் கொரோனா தொற்றின் போது சில மருந்து பொருட்களுக்கு வழங்கிய சலுகையை இந்த வருடம் இறுதிவரை நீட்டிக்க முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை வழங்குவது பற்றியும் பரிசீலிக்கபட உள்ளதாக கூறப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சகம் தெருவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.