இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணை வாங்க பிலிப்பைன்ஸ் அரசு ஒப்புதல்..

பிலிப்பைன்ஸ் வெள்ளிக்கிழமை தனது கடற்படைக்கு கடற்கரை அடிப்படையிலான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை கையகப்படுத்தும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 374.9 மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த திட்டத்தை பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

இதனை பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்றுக்கொண்டதை அடுத்து விரைவில் கையெழுத்தாகும் என கூறப்பட்டுள்ளது. சீனாவுடன் தென்சீனக்கடலில் மோதல் நீடித்து வரும் நிலையில் தனது கடற்படையை வலிமைபடுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வாங்க உள்ளது.

பல வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கனிமவளம் கொட்டிக்கிடக்கும் தென்சீனகடல் பகுதியை சீனா உரிமை கோருகிறது. ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், புரூனே, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்க உள்ளது.

பிரமோஸ் ஏவுகணையானது DRDO மற்றும் ரஷ்யாவின் NPO மாஷினோஸ்ட்ரோவேனியா ஆகியவற்றுக்கு இடையேயான இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பு ஆகும். இந்த பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை கப்பல்கள், நீர்மூழ்கிகப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரையில் இருந்தும் ஏவ முடியும்.

Also Read: சீனாவுக்கு எதிராக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா..

இந்த பிரமோஸ் ஏவுகணை 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்க கூடியது. பிலிப்பைன்ஸ் வாங்க உள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணை 290 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தவிர வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, புரூனே, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

Also Read: மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை ரகசியமாக கடலில் இறக்கிய இந்திய கடற்படை..

கடந்த செவ்வாய் கிழமை ஜனவரி 11 அன்று DRDO பிரமோஸ் கப்பல் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக DRDO தனது செய்திகுறிப்பில் கூறி இருந்தது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

Also Read: DRDO உடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானத்தை உருவாக்கி வரும் HAL..

Leave a Reply

Your email address will not be published.