இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆரம்ப நிதியை வெளியிட்டது பிலிப்பைன்ஸ்..

இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்காக பிலிப்பைன்ஸ் ஆரம்ப நிதியை வெளியிட்டுள்ளது. இதற்காக பிலிப்பைன்ஸ் பட்ஜெட் துறையானது, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் போர் ஹெலிகாப்டர்களை கையகப்படுத்துவதற்கு பிலிப்பைன்ஸ் கரன்சியில் P5 பில்லியன் மதிப்பிலான நிதியை ஒதுக்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு கடற்கரை அடிப்படையிலான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புக்காக டிசம்பர் 27 அன்று பட்ஜெட் மேலாண்மை துறையால் P1.3 மற்றும் P1.535 பில்லியன் மதிப்புள்ள இரண்டு சிறப்பு ஒதுக்கீடு வெளியீட்டு ஆணை வெளியிடப்பட்டன. விரைவில் ஏற்றுமதி தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், இந்தியாவின் பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைக்ளை அரசு-அரசாங்க ஒப்பந்தத்தின் கீழ் வாங்கும் என எதிர்பார்க்கிறோம். பிரமோஸ் ஏவுகணை மற்றும் பிற இந்திய பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான “செயல்படுத்தும் ஒப்பந்தத்தில்” பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடலோர பாதுகாப்பு மற்றும் தரை தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய ஏவுகணை அமைப்பை தென்சீனக்கடலில் முக்கியமாக சீன ஆக்கிரமிப்பிற்கு எதிராக நிறுத்த பிலிப்பைன்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் மற்றும் ஆறு கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் போர் கப்பல்களுக்கும் P32 மற்றும் P28 பில்லியன் மதிப்புள்ள நிதியை ஒதுக்கியுள்ளது.

Also Read: சீனாவின் உதவியுடன் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வரும் சவுதி அரேபியா..?

இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் துணை செயலாளர் ரெய்மண்ட் எலிஃபான்டே மற்றும் இந்திய தூதர் குமரன் ஆகியோர் பிலிப்பைன்ஸின் ஆயுதப்படைகளின் தலைமையகமான கேம்ப் அகுனால்டோவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Also Read: Z ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள CRPF பெண் கமாண்டோக்கள்..

பிரமோஸ் ஏவுகணைகள் நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், விமானங்கள் அல்லது தரைவழி தளங்களில் இருந்து ஏவக்கூடிய ஒலியை விட வேகமான சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். 2025 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்க உள்ளது.

Also Read: நடுவானில் பாதையை மாற்றும் குறுகிய தூர பிரலே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

Leave a Reply

Your email address will not be published.