உ.பியில் பிரமோஸ் ஏவுகணைக்கான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க திட்டம்..?

பிரமோஸ் ஏவுகணையை தயாரிக்க பிரமோஸ் ஏரோஸ்பேசின் ஒரு குழு உத்திரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிரமோஸ் ஏவுகணையை தயாரிப்பதற்காக சுமார் 200 நிலம் லக்னோவில் கேட்கப்பட்டுள்ளதாக பிரமோஸ் ஏரோஸ்பேசின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பிரமோஸ் என்பது இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPO நிறுவனங்களின் கூட்டு முயற்சி ஆகும். பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை உலகிலேயே மிக அதிவேக மற்றும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையாகும்.

லக்னோவில் அமைய உள்ள பிரமோஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பிரமோஸ் ஏவுகணையானது ரஷ்யாவின் P-800 கப்பல் ஏவுகணையை அடிப்படையாக கொண்டது.

இந்த புதிய உற்பத்தி ஆலை மூலம் நேரடியாக 500 பேருக்கு வேலைவாய்ப்பும், 5,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரமோஸ் குழுவினர் உத்திரபிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

புதிதாக அமையவுள்ள இந்த ஆலையில் வருடத்திற்கு 30 முதல் 50 ஏவுகணைகள் வரை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பிரமோஸ் ஏவுகணையின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த புதிய உற்பத்தி மையத்தை DRDO தொடங்க உள்ளது.

ஏற்கனவே இந்திய இராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படையில் பிரமோஸ் ஏவுகணை சேர்க்கப்பட்டு விட்டது. பிரமோஸ் ஏவுகணையை இராணுவத்திற்கு மட்டும் அல்லாமல் வர்த்தக ரீதியாகவும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிரமோஸ் ஏவுகணையை வாங்க நிறைய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதால் தயாரிப்பு அதிகரிக்கப்படும் என பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிர்வாக தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.