PLFI நக்சல்களுடன் தொடர்பு.. டெல்லியில் வங்கதேச பெண்ணை கைது செய்த போலிஸ்..
இந்திய மக்கள் விடுதலை முன்னணி (PLFI) நக்சல் அமைப்பின் நிதியுதவி மற்றும் ஆயுத விநியோக வழக்கில் டெல்லியை சேர்ந்த பெண்ணை ஜார்கண்ட் போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் வங்கதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் இவருடைய உண்மையான பெயர் கனிஸ் பாத்திமா. இவர் இந்தியாவில் லில்லி அல்லது அஞ்சலி படேல் என தனது பெயரை மாற்றியுள்ளார். பாத்திமா வங்கதேசத்தின் குல்னாவை பூர்வீகமாக கொண்டவர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து தனது பெயரை அஞ்சலி படேல் என மாற்றியுள்ளார்.
முதலில் பாத்திமா பெங்களூரில் உள்ள மசாஜ் சென்டரில் பணிபுரிந்துள்ளார். பின்னர் டெல்லிக்கு வந்து அங்குள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான PLFI அமைப்பின் தலைவன் தினேஷ் கோபே சார்பாக ஆயுதங்கள் சப்ளை மற்றும் பணத்தை முதலீடு செய்வது போன்ற வேலைகளில் பாத்திமா ஈடுபட்டு வந்துள்ளார்.
ராஞ்சி போலிசார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சில PLFI நக்சல்களை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தினேஷ் கோபேவின் நெருங்கிய உதவியாளர் நிவேஷ் குமார் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர். நிவேஷ் பீகாரை சேர்ந்தவன், தற்போது ராஞ்சியில் குடியேறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களிடம் இருந்து BMW மற்றும் Thar ஆகிய 2 எஸ்யூவி சொகுசு கார்கள், 71 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், ஆயுதங்கள் மற்றும் டஜன் கணக்கான மொபைல்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மொபைல் போனை ஆய்வு செய்ததில் PLFI உடன் ஆயுத கடத்தல் மற்றும் சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். அந்த மொபைல் மூலம் தான் பாத்திமாவை போலிசார் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பாத்திமா நிவேஷின் காதலி என தெரியவந்துள்ளது. மேலும் PLFI தொடர்பான நிதி மற்றும் முதலீடு தொடர்பாக பல ரகசியங்கள் பாத்திமாவிற்கு தெரிந்திருக்கலாம் என்பதால் போலிசார் பாத்திமாவை காவலில் வைத்துள்ளனர். நிவேஷூக்கு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீன ஆயுத கடத்தல் காரர்களுடன் தொடர்பு இருக்கலாம் என போலிசார் தெரிவித்துள்ளனர்.
நிவேஷ் பாத்திமாவுக்கு டெல்லியில் மூன்று நடசத்திர ஹோட்டல் ஒன்றை வாங்கி கொடுத்து நிர்வகிக்க கூறியுள்ளார். இந்த ஹோட்டல் மூலம் கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவும் PLFI பயங்கரவாதிகள் ஹோட்டலில் தங்கிகொள்ள ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
Also Read: சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு..
யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நிவேஷ் பாத்திமாவை திருமணம் செய்து கொண்டு தனது மனைவி என அனைவரிடமும் கூறியுள்ளான். சொகுசு காரில் கொல்கத்தா, டெல்லி, பெங்களூர் என சுற்றியுள்ளனர். பாத்திமா ஏற்கனவே திருமணமானவர். வங்கதேசத்தில் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரிடம் இருந்தும் போலியான ஆதார்கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வங்கதேசம் குல்னாவில் இருந்து ஏராளமான பெண்கள் பாலியல் தொழிலுக்காக இந்தியாவிற்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்படுகின்றனர்.
Also Read: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு..
இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்திலும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த சில சிறுமிகளை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த குல்னா மாவட்டத்தில் தான் கடந்த ஆண்டு இந்துக்களுக்கு எதிராக வன்முறை நிகழ்ந்தது. தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நிவேஷின் தந்தை மற்றும் சகோதரர்கள் சுபாஷ் பாஸ்வான் மற்றும் பிரவீன் பாஸ்வான் ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர்.