காஷ்மீரில் இந்திய ஆதார் அட்டையுடன் சீனாவை சேர்ந்த நபரை கைது செய்த போலிசார்..

இந்த வார துவக்கத்தில் மத்திய காஷ்மீரின் சுந்தர்பால் மாவட்டத்தில் இந்திய ஆதார் அடையாள அட்டையுடன் வந்த சீன நாட்டவரை ஜம்மு காஷ்மீர் போலிசார் கைது செய்துள்ளனர். சீன நாட்டவரிடம் ஆதார் அடையாள அட்டையை கைப்பற்றி இருப்பது போலிசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார துவக்கத்தில் ஜம்மு காஷ்மீரை லடாக் யூனியன் பிரதேசத்துடன் இணைக்கும் சுந்தர்பால் மாவட்டத்தில் உள்ள லேயில் இருந்து ஶ்ரீநகருக்கு செல்லும் வழியில் 47 வயதான யாங் சுஹாங் என்ற சீன நாட்டவரை போலிசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவரது உடைமைகளை சோதனையிட்ட போது இந்திய ஆதார் அட்டை யாங் சுஹாங் பெயரில் கிடைத்துள்ளது.

3642 5758 9471 என்ற எண்ணை கொண்ட அவரது பெயரில் வழங்கப்பட்ட ஆதார் அட்டையை போலிசார் கைப்பற்றினர். இந்த அடையாள அட்டை எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்பிய நிலையில், மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தான் பணிபுரிவதாகவும், அதிகாரப்பூர்வ நோக்கத்திற்காக ஆதார் அட்டை தேவைப்படுவதாகவும் யாங் சுஹாங் தெரிவித்துள்ளார்.

Also Read: NIA அதிகாரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு..

இதனால் சந்தேகமடைந்த போலிசார் மேல் விசாரணைக்காக விமானத்தில் லே வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காஷ்மீருக்கு யாங் சுஹாங்கை அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் இருந்து PE2110679-2021 என்ற சீன பாஸ்போர்ட் மும்பையில் இருந்து வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட் 2026 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் மற்றும் அவர் சீனாவின் கன்சுவில் வசிப்பவர் என போலிசார் கண்டறிந்துள்ளனர்.

Also Read: சட்டம் ஒழுங்கு சீர்கேடு: பஞ்சாபிற்கு துணை ராணுவத்தை அனுப்ப DGP கோரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.