ஈரானில் ஸ்கேட்போர்டிங் நிகழ்வில் ஹிஜாப் அணியாத பெண்கள், சிறுமிகளை கைது செய்த போலிசார்..

ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் ஸ்கேட்போர்டிங் விளையாட்டின் போது ஹிஜாப் அணியாத சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஈரான் போலிசார் கைது செய்துள்ளனர்.

செவ்வாய்கிழமை நடந்த கோ ஸ்கேட்போர்டிங் டே நிகழ்வின் போது சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் ஹிஜாப் அணியாமல் விளையாடிய வீடியோ ஈரான் சமூகவலைதலங்களில் பரவியது. இந்த நிலையில் ஷிராஸ் காவல்துறை தலைவர் ஃபாஜ் ஷோஜே செய்தியாளர்களிடம் கூறுகையில், பல சிறுமிகள் விளையாட்டு நிகழ்வின் முடிவில் ஹிஜாபை சட்ட விதிகளை கடைபிடிக்காமல் அகற்றியுள்ளனர்.

நீதித்துறையின் ஒருங்கிணைப்புடன் இந்த கூட்டத்தில் தொடர்புடைய பல குற்றவாளிகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மத மற்றும் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்காமல் விளையாட்டு மற்றும் கூட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் சட்டத்தின்படி கையாளப்படுவார்கள் என ஃபாஜ் ஷோஜே தெரிவித்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிராஸ் கவர்னர் லோட்ஃபோல்லா ஷெய்பானி கூறுகையில், சமூக, மத மற்றும் தேசிய விதிகளை மீறும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு புரட்சியில் இருந்து நடைமுறையில் உள்ள இஸ்லாமிய சட்டத்தின் கீழ், பெண்கள் தலை மற்றும் கழுத்தை மறைக்கும் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும்.

Also Read: இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கினி உடைக்கு தடை விதித்த பிரான்ஸ் நீதிமன்றம் ..?

ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஈரானிய பெண்கள் தங்கள் தலைமுடி பின்னோக்கி தெரியும்படி அதிக முடியை வெளிப்படுத்தியுள்ளனர். பல பெண்கள் ஹிஜாப்பிற்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுகிழமை நாட்டின் வடக்கில் உள்ள ஒரு காட்டில் மது விருந்து, ஆண்களுடன் கலப்பு நடனம் மற்றும் ஹிஜாப்பை அகற்றியதற்காக 120 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

Also Read: இஸ்லாம் அரசு மதம் கிடையாது.. புதிய மசோதாவை தாக்கல் செய்த துனிசிய ஜனாதிபதி..?

ஈரானிய சட்டத்தின்படி, முஸ்லிம் அல்லாத குடிமக்கள் மட்டுமே மத நோக்கங்களுக்காக மது அருந்த அனுமதிக்கப்படுகிறார்கள். அதேநேரம் கலப்பு நடனம் தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது ஹிஜாப்பை அகற்றியதற்காக சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை போலிசார் கைது செய்து இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.