ஊழல் வழக்கில் பினராயி விஜயன் மீது புகார் அளித்த பத்திரிக்கையாளர் மீது ஆபாச வீடியோ எடுத்ததாக போலிசார் வழக்கு பதிவு..

ஜூன் 17 அன்று, தனது சக ஊழியரை ஆபாச வீடியோ எடுக்க கட்டாயப்படுத்தியதாக பத்திரிக்கையாளர் டி.பி.நந்தகுமாரை கேரள போலிசார் கைது செய்துள்ளனர்.

க்ரைம் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் டி.பி.நந்தகுமார், தனது சக பெண் ஊழியரிடம் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெண் ஊழியர் அளித்த புகாரில், சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜை குறிவைத்த ஒரு ஆபாச வீடியோவை தயாரிக்க நந்தகுமார் தன்னிடம் கூறியதாக அவர் தனது புகாரில் தெரிவித்ததாக கேரள போலிசார் தெரிவித்துள்ளனர்.

தான் வீணா ஜார்ஜை போலவே தோற்றமளிப்பதாகவும், எனவே ஒரு ஆபாச படத்தில் நடிக்க நந்தகுமாரால் கட்டாயப்படுத்த பட்டதாக தெரிவித்துள்ளார். இதற்காக தனக்கு ஒரு தொகையை நத்நகுமார் வழங்கியதாகவும், மறுத்தபோது ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2021 ல் பத்திரிக்கையாளர் நந்தகுமார், கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி பி.சி.ஜார்ஜை பேட்டி எடுத்தார். அப்போது அவர் முதல்வர் பினராயி விஜயனுக்கு உதவியாளராக இருந்ததால்தான் வீணா ஜார்ஜ் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் கிரைம் பத்திரிக்கை தொலைபேசி நேர்காணலை வெளியிட்டது.

பின்னர் வீணா ஜார்ஜுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும், குரல் பதிவை சமூக ஊடகங்களில் பரப்பியதற்காகவும் பத்திரிக்கையாளர் நந்தகுமார் கைது செய்யப்பட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை அவமதித்ததாக முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்ட்டது.

இதற்கு முன் பத்திரிக்கையாளர் நந்தகுமார் பலமுறை பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு வைத்து சட்டபோராட்டங்களை நடத்தியுள்ளார். மே 1996 முதல் அக்டோபர் 1998 வரை கேரள மின்சார துறை அமைச்சராக பினராயி விஜயன் இருந்தபோது, கனடாவின் எஸ்.என்.சி-லாவலின் நிறுவனத்திற்கு நீர்மின் திட்ட சீரமைப்பு ஒப்பந்தங்களை அதிக கட்டணத்தில் வழங்கியதாக 2006ல் அமலாக்க துறையிடம் ஆதாரங்களை வழங்கினார்.

அவருக்கு எதிராக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம் புகார் தெரிவித்து இருந்தார். இருப்பினும் சிபிஐ நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என பினராயி விஜயனை விடுவித்தது. மேலும் சமீபத்தில் கேரள தங்க கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுவதில் பத்திரிக்கையாளர் நந்தகுமார் மற்றும் பி.சி.ஜார்ஜ்க்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: ஐநாவில் இந்தியரை பயங்கரவாதியாக அறிவிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா உட்பட 5 நாடுகள் நிராகரித்தன..

முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் நந்தகுமார் மற்றும் பி.வி.ஜார்ஜ் இருப்பதாக கேரள போலிசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பெண் ஊழியரின் புகாரின் பேரில் நந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது SC & ST வன்கொடுமை தடுப்பு சட்டம், 1989 மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 506 குற்றவியல் அச்சுறுத்தலுக்கான தண்டனை மற்றும் 509 ஒரு பெண்ணின் மானத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட வார்த்தை, சைகை அல்லது செயல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.