இந்தியா உள்ளிட்ட 5 நாட்டு தூதர்களை நீக்கி உத்தரவிட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சனிக்கிழமை அன்று இந்தியா உட்பட வெளிநாடுகளில் உள்ள உக்ரைனின் தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இதனை ஜனாதிபதி இணையதளம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான உக்ரைனின் தூதர்களை பதவி நீக்கம் செய்வதாக அதிபர் அறிவித்துள்ளார். எதனால் பதவி நீக்கம் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும் இவர்களுக்கு புதிய வேலைகள் வழங்கப்படுமா என்ற தகவலும் இல்லை.
பிப்ரவரி 24 ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க உக்ரைன் முயற்சிக்கும் நிலையில், சர்வதேச ஆதரவையும் இராணுவ உதவிகளையும் பறை சாற்றுமாறு தனது நாட்டு தூதர்களை வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி இருந்தார். ரஷ்யாவின் எரிசக்தி விநியோகத்தை பெரிதும் நம்பியிருக்கும் ஜெர்மனி உடனான உக்ரைனின் உறவுகள் தற்போது மோசமடைந்து வருகிறது.
உக்ரைன் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை நம்பி உக்ரைன் உள்ளது. தற்போது கனடாவில் ஜெர்மனியால் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் டர்பைன் தொடர்பாக ஜெர்மனி மற்றும் உக்ரைன் இடையே விரிசல் வந்துள்ளது. ஐரோப்பாவிற்கு எரிவாயுவை அனுப்புவதற்காக ஜெர்மனி, ரஷ்ய இயற்கை எரிவாயு நிறுவனமான கஷ்ப்ரோம் நிறுவனத்திற்கு டர்பைனை கொடுக்க விரும்புகிறது.
ஆனால் டர்பைனை ரஷ்யாவிற்கு அனுப்புவது ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறியதாக இருக்கும் என கூறி டர்பைனை ரஷ்யாவிற்கு அனுப்ப கூடாது என உக்ரைன் கனடாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.