ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி..

ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஜூன் 11 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் தலைவர்களை இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். இந்தியாவின் குடியரசு தின விழாவில் சுதந்திர தின சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் தொடர்பாக இங்கிலாந்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த முறை இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனின் வருகை இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் முதன்முறையாக கடந்த மாதம் பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இரண்டாவதாக இங்கிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 8 ஆம் தேதி இந்தியா ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு பயணத்தையும் மோடி ரத்து செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *