ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.. பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு..
விஜயதசமியான இன்று நாட்டின் 200 வருடம் பழமையான ஆயுத தொழிற்சாலைகள் 7 பெரும் நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நநேந்திரமோடி இன்று நாட்டுக்கு அர்பணித்தார்.
200 வருடம் பழைமையான OFB எனப்படும் பழங்கால தொழிற்சாலை வாரியத்தை கலைத்து இந்த 7 புதிய நிறுவனங்கள் உறுவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தன. தற்போது இதனை பிரதமர் மோடி மறுசீரமைப்பு செய்து வருகிறார்.
புதிதாக தொடங்கப்பட்ட ஏழு நிறுவனங்கள்: கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட்(GIL), ட்ரூப் கம்போர்ட்ஸ் லிமிடெட்(TCL), யந்த்ரா இந்தியா லிமிடெட்(YIL), இந்தியா ஆப்டெல் லிமிடெட்(IOL), முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட்(MIL), ஆர்மௌட் வெஹிகிள்ஸ் நிகாம் லிமிடெட்(AVANI) மற்றும் அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் மற்றும் எகுப்மென்ட்ஸ் இந்தியா லிமிடெட்(AWEIL) ஆகியவை புதிய நிறுவனங்களாக தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்கு பிறகு இந்த ஆயுத தொழிற்சாலைகளை நாம் மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் அதனை செய்யவில்லை. இதனால் பாதுகாப்பு தடவாளங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டி இருந்தது.
ஆனால் தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் காலத்திற்கு ஏற்றார்போல் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். இராணுவத்தில் புதுமையை புகுத்த வேண்டும். நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலகளாவிய பிராண்டுகளாக மாற்ற வேண்டும் என ஏழு நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார்.
Also Read: மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும்.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை..
21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாடு அஃன் வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. மென்பொருள் முதல் விண்வெளித்துறை வரை இந்தியா சிறப்பான வளர்ச்சியை கொண்டுள்ளது. எனவே புதுமைகள் மற்றும் ஆராய்ச்சிகள் உங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என ஏழு நிறுவனங்களையும் நான் கேட்டுகொள்கிறேன் என மோடி கூறினார்.
உங்கள் ஆராய்ச்சியை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். எதிர்கால தொழிற்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 70,000 ஊழியர்கள் பணிபுரியும் இந்த பல நிறுவனங்களை 100 சதவீதம் அரசுக்கு சொந்தமான 7 பெரும் நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என ராஜ்நாத்சிங் உறுதியளித்துள்ளார்.
Also Read: இந்திய விண்வெளி சங்கத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. விண்வெளித்துறையில் புதிய மைல்கல்..