இந்தியாவின் அதிநவீன ராணி கம்லாபதி இரயில் நிலையத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி..
இந்தியாவின் அதி நவீன இரயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த இரயில் நிலையம் விமான நிலையத்திற்கு இணையானது என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு ராணி கம்லாபதி இரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த இரயில் நிலையம் முன்பு ஹபீப்கஞ்ச் இரயில் நிலையம் என அழைக்கப்பட்டது.
தற்போது இந்த இரயில் நிலையம் 450 கோடி செலவில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இரயில் நிலையம் மத்திய பிரதேசத்தில் உள்ள மற்ற ரயில் நிலையங்களை விட அதி நவீன இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் உலகத்தரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரயில் நிலையம் பசுமை இரயில் நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருப்பது போன்றே ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உஜ்ஜைர் மற்றும் இந்தூர் இடையே இயக்கப்படும் முதல் இரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இதுத்தவிர பல்வேறு பணிகளையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். போக்குவரத்திற்கு முக்கிய மையமாக இந்த இரயில் நிலையம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த இரயில் நிலையம் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் என அழைக்கப்பட்டது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இரயில் நிலையத்திற்கு பழங்குடியின ராணியான ராணி கம்லாபதியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் ராணி கம்லாபதி கோண்ட் சமூகத்தின் பெருமை மற்றும் கோண்ட் சமூகத்தின் கடைசி இந்து ராணி ஆவார். மேலும் ஆப்கானிஸ்தானின் தளபதி தோஸ்த் முகமது, ராணியின் ராஜியத்தை சதி திட்டத்தின் மூலம் கைப்பற்றினான். இதனால் தன் சுய மரியாதையை காப்பாற்றி கொள்ள ராணி ஜல் ஜௌகர் எனப்படும் உயிரை மாய்த்து கொள்ளும் முடிவை எடுத்தார் என முதல்வர் குறிப்பிட்டார்.