இந்திய விண்வெளி சங்கத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. விண்வெளித்துறையில் புதிய மைல்கல்..
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணி அளவில் இந்திய விண்வெளி சங்கத்தை துவக்கி வைக்க உள்ளார். விண்வெளி மற்றும் புதுமை உலகில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்த இந்திய விண்வெளி சங்கம் (ISpA) துவக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது விண்வெளி துறை சார்ந்த நபர்களுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த ISpA மூலம் இந்தியா விண்வெளி மற்றும் தொழிற்நுட்ப ரீதியில் முன்னணி நாடாக திகழ உதவும்.
ISpA என்பது இந்திய விண்வெளி துறையின் முதல் தொழில் சங்கமாகும். இதில் இந்திய அரசு மற்றும் தனியார் என அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும். இதில் இந்திய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும்.
இந்திய நிறுவனமான டாடா குழுமத்தின் நெல்கோ, லார்சன் அண்ட் டூப்ரோ, ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப்மைண்டியா, லால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆனந்த் டெக்னாலஜி லிமிடெட் ஆகியவை இந்திய விண்வெளி சங்கத்தில் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.
Also Read: போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானின் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்திய BYJU’S நிறுவனம்..
கோத்ரேஜ், ஹியூஸ் இந்தியா, அஜிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ், பிஇஎல், மேக்சர் இந்தியா மற்றும் சென்டம் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை மற்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய விண்வெளி சங்கம் உலகளாவிய அளவில் தொழில் நலன்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும்.
Also Read: தான் ஒருநாளும் பிரதமர் ஆவேன் என கனவிலும் நினைத்ததில்லை: பிரதமர் மோடி
இன்று காலை 11 மணி அளவில் இந்திய விண்வெளி சங்கத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். விண்வெளி துறை போட்டியில் இந்தியாவும் உள்ள நிலையில் விண்வெளி துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.