உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்..!

குளோபல் டேட்டா இன்டலிஜென்ஸ் மார்னிங் கன்சல்டிங் நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பின்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி 70 சதவீத ஆதரவை பெற்று முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 48 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

பிடனின் இந்த வீழ்ச்சிக்கு அவர் ஆப்கானிஸ்தான் பிரச்சனையை சரியாக கையாளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் பிரச்சனையை பிடன் கையான்ட விதம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் விமர்சித்துள்ளார். அமெரிக்க படைகளை அவசர அவசரமாக பிடன் வெளியேற்றியதாகவும், அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானிஸ்தானியர்களை முழுமையாக வெளியேற்றவில்லை என ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

ஆப்கன் பிரச்சனையை அவர் கையான்ட விதத்தினால் தான் அவரின் மதிப்பு குறைந்துள்ளது. அவர் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு அடுத்தப்படியாக ஐந்தாவது இடத்தில் உள்ளார். அதிபர் ஜோ பிடன் பதவி ஏற்றதில் இருந்தே அவரின் மதிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் தான் இருந்தது.

ஆனால் ஆப்கன் பிரச்சனைக்கு பிறகுதான் அவரின் மதிப்பு 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்து 48 சதவீதமாக உள்ளது. கருத்து கணிப்பின் படி பிரதமர் மோடி 70% ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மேனுவல் 64%, இத்தாலியின் மரியோ டிராகி 63%, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52%, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 48%, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 48%, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ 45%, இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் 41%, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 39%, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் 38%, ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் 35%, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 34%, ஜப்பான் பிரதமர் யோஷிகாட் சுகா 25% ஆதரவுடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.