இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி..
இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பாரத் ட்ரோன் மஹோத்சவ் என்ற இந்த ட்ரோன் திருவிழா டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
பிரதமர் அலுவலகத்தின்படி, பிரதமர் மோடி ட்ரோன் விமானிகளுடன் உரையாடுவார். திறந்தவெளி ட்ரோன் கண்காட்சியை பார்வையிடுகிறார் மற்றும் ட்ரோன் கண்காட்சி மையத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் உரையாடுகிறார். இந்த பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022 ட்ரோன் திருவிழா மே 27 மற்றும் மே 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.
இந்த ட்ரோன் திருவிழாவில், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுத படைகள், மத்திய ஆயுத போலிஸ் படைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ட்ரோன் ஸ்டார்ட்அப்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 1600க்கும் மேற்பட்டோர் பாரத் ட்ரோன் மஹோத்சவ் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.
70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ட்ரோன்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவார்கள். ட்ரோன் பைலட் சான்றிதழ்கள், தயாரிப்பு அறிமுகங்கள், குழு விவாதங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் டாக்ஸி முன்மாதிரியின் காட்சி போன்றவை நிகழ்ச்சியில் இடம்பெறும்.
Also Read: ககன்யான் திட்டத்திற்கான உலகின் மிகப்பெரிய பூஸ்டரை வெற்றிகரமாக சோதனை செய்த இஸ்ரோ..
சமீப காலமாக ட்ரோன்கள் விவசாயத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரோன் மூலம் உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பரவல், பயிர் மதிப்பீடு, பயிர்களின் போக்குவரத்து, நில பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பல பயன்பாட்டுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Also Read: விண்ணில் ஏவப்பட உள்ள இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1..?
சமீபத்தில் இந்தியா முழுவதும் உள்ள பண்ணைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கு ஏராளமாக வாய்ப்புகள் உருவாகின்றன.
Also Read: மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி வாகனத்தை விரைவில் சோதனை செய்ய உள்ள இஸ்ரோ..