இந்தியாவின் மிகப்பெரிய விமானநிலையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடி நாளை உத்திர பிரதேசத்தின் ஜேவர் நகரில் நொய்டா சர்வதேச விமானநிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் நொய்டா, கிழக்கு டெல்லி, மீரட், காசியாபாத், கிரேட்டர் நொய்டா, கிழக்கு டெல்லி மற்றும் மேற்கு உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடியும்.

இந்த நொய்டா இன்டர்நேஷ்னல் விமான நிலையத்தை யமுனா இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் (YIAPL) நிறுவனம் கட்டமைக்க உள்ளது. இந்த விமான நிலையம் இரண்டு ஓடுபாதை கொண்ட விமானநிலையம் ஆகும். 1,300 ஹெக்டேர் பரப்பளவில் அமைய உள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஆறு ஓடுபதைகள் கொண்ட விமானநிலையமாக மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக விமானநிலையம் 2,900 ஹெக்டர் அதாவது 7,200 ஏக்கர் பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விமானநிலையம் தொடக்கத்தில் ஐந்து மில்லியன் மக்கள் தொகையை கையாளும் என கூறப்பட்டுள்ளது. விரிவாக்கத்திற்கு பிறகு இந்த விமான நிலையம் 30 முதல் 120 மில்லியன் மக்கள் தொகையை கையாளும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விமானநிலையம் டெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ளது. நொய்டா விமானநிலையத்துடன் ரயில் நிலையம், மெட்ரோ நிலையம் மற்றும் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தின் மூலம் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் கிழக்கு டெல்லி, மேற்கு உத்திர பிரதேச மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும்.

தற்போது இரண்டு ஓடுபாதைகள் மட்டுமே கட்டமைக்கப்பட உள்ளன. எதிர்காலத்தில் ஆறு ஓடுபாதைகளாக மாற்றியமைக்கும் போது இந்த விமானநிலையம் இந்தியாவின் மிகப்பெரிய விமானநிலையமாக இருக்கும் மற்றும் உலகின் மிகப்பெரிய விமானநிலையங்களில் ஒன்றாகவும் இருக்கும். இந்த விமான நிலையம் இந்தியா மற்றும் உத்திரபிரதேச வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியா ஏற்றுமதியில் இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டும்: வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்

இந்த விமானநிலைய கட்டுமானத்திற்காக YIAPL நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் நொய்டா இன்டர்நேஷ்னல் ஏர்போர்ட் லிமிடெட் (NIAL) நிறுவனத்துடன் நிதஉதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. SBI வங்கியில் இருந்து 3,725 கோடி கடனை திரட்டி, அதனை 20 வருட காலத்தில் திருப்பி செலுத்தும் வகையில் ஒப்பந்தம் போடபட்டுள்ளது.

Also Read: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.25 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடிக்கு நஷ்டம்..?

இந்த விமானநிலையத்தில் மல்டிமாடல் டிரான்சிஸ்ட் ஹப், மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்கள், டாக்சி மற்றும் பேருந்து சேவைகள் மற்றும் தனியார் பார்கிங் வசதி உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானநிலையம் வட இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக இருக்கும் என கூறப்படுகிறது. டெல்லி, ஆக்ரா மற்றும் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழிற்துறை மேம்பாட்டு பகுதிக்கு முக்கியமான சர்வதேச விமானநிலையமாக நொய்டா விமான நிலையம் இருக்கும்.

Also Read: உலக நாடுகளை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற மெகா திட்டம்..

Leave a Reply

Your email address will not be published.