உலக நாடுகளை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற மெகா திட்டம்..

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான COP 26 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் அனைத்து நாடுகளும் சூரிய சக்தி பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார். “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற திட்டத்தையும் பிரதமர் மோடி கூறினார்.

தொழில் புரட்சியால் சீர்குழைந்த சுற்றுச்சூழலை மீண்டும் நிலைநாட்ட சூரியை சக்தி உதவும் என மோடி கூறினார். தூய்மையான தொழிற்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் வரிசைபடுத்துதல் என்ற பிரிவின் கீழ் பேசிய மோடி, “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற அழைப்பை உலக நாடுகளுக்கு விடுத்தார்.

புதைப்படிவ எரிபொருட்களால் இயக்கப்பட்ட தொழில்துறை புரட்சியால் பல நாடுகள் தங்களை வளர்த்து கொள்ள உதவியது. ஆனால் அதே தொழிற்புரட்சி நமது பூமியை ஏழ்மை ஆக்கியது. ஆனால் தொழிற்நுட்பம் நமக்கு அற்புதமான மாற்று ஒன்றை வழங்கி உள்ளது.

சூரிய ஆற்றல் திறனை கண்டறிய செயற்கைகோள் தரவை பயன்படுத்தும் சோலார் காலகுலேட்டர் பயன்பாட்டை உலகிற்கு வழங்க இஸ்ரோ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இது புதைப்படிவ எரிபொருட்களுக்கு மாற்றாக இருக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் என்ற இயற்கையான தொடர்பு இருந்த வரை நமது பூமி ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தொழில் போட்டியில் மனித இனம் சூரியனை முந்தி செல்ல முயன்றதால் இயற்கையின் சமநிலை சீர்குழைந்து, சுற்றுச்சூழலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டது.

Also Read: தீபாவளி பண்டிகை விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடி நஷ்டம்..? CAIT அறிவிப்பு..

சுற்றுச்சூழல் சமநிலையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்றால் நாம் மீண்டும் இயற்கையுடன் இணைந்து பயனிக்க வேண்டும். அதற்கு சூரிய சக்தி மிக பயனுள்ளதாக இருக்கும் என மோடி தெரிவித்தார். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு வருடத்தில் உட்கொள்ளும் ஆற்றல், சூரியன் ஒரு மணி நேரத்தில் பூமிக்கு வழங்கும் ஆற்றலுக்கு சமம் என பிரதமர் மோடி கூறினார்.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனம்..

இதற்கு ஒரே தீர்வு, “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” தான். ஆனால் இதில் உள்ள ஒரே பிரச்சனை, சூரிய ஆற்றல் பகலில் மட்டும் தான் கிடைக்கும் மற்றும் தட்பவெப்ப சூழல். இந்த உலகளாவிய சூரிய சக்தி கட்டம் மூலம் சுற்றுச்சூழலை சமநிலை படுத்த முடியும். சர்வதேச சோலார் மின் கட்டத்தை உருவாக்குவதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைக்க முடியும் என பிரதமர் மோடி கூறினார்.

Also Read: இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை..

Leave a Reply

Your email address will not be published.