கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம்.. கிறிஸ்துவர்களுக்கு எதிரானது என காங்கிரஸ் எதிர்ப்பு..
கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசு வரும் குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கிறிஸ்துவர்களை குறிவைக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவருவதாக காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மூத்த தலைவர்களுடன் 2000க்கும் மேற்பட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் காங்கிரஸ் மாநில தலைவர் டி கே சிவகுமார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், இந்த மதமாற்ற தடை சட்டம் மாநிலத்தில் முதலீட்டை ஈர்ப்பதற்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் அரசு எந்த வடிவத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தினாலும் அதனை காங்கிரஸ் எதிர்க்கும் என தெரிவித்துள்ளார்.
2023 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே பாஜக அரசு மதமாற்ற தடைசட்டத்தை கொண்டு வருகிறது. இந்த மதமாற்ற தடை சட்டத்தின் மூலம் கல்வி மற்றும் மற்ற பிற துறைகளில் கிறிஸ்துவர்களின் பங்களிப்பை குறைப்பதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது என கூறியுள்ளார்.
Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் இந்தோனேசிய முதல் ஜனாதிபதியின் மகள்..
சனிக்கிழமை முன்மொழியப்பட்ட இந்த மதமாற்ற தடை சட்டத்தின் மூலம் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், மதம் மாறுவதற்கு முன்பாக மாஜிஸ்திரேட் முன்பு அறிவிப்பு செய்யவும் வழிவகுக்கும். தேவப்படும் பட்சத்தில் காவல்துறை விசாரணை நடத்துவதற்கு இந்த சட்டம் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் முன்னாள் ஷியா வக்ஃப் வாரிய தலைவர்..
பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பா கூறுகையில், இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கவே மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார். வரும் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மசோதாவாக தாக்கல் செய்யப்பட உள்ளது. சமீபகாலமாக கர்நாடகாவில் மதமாற்றம் அதிகரித்து வருவதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து பாஜக அரசு இந்த மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர உள்ளது.
Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..