பஞ்சாப் முதல்வர் சன்னி இரவு காவலராக மட்டுமே இருப்பார்.. கேப்டன் அமரீந்தர் சிங் விமர்சனம்..
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், அவருக்கு பின் வந்த சரண்ஜித் சிங் சன்னியிடம் அபார திறமை இருந்தும், பஞ்சாப் முதல்வர் இரவு காவலாளியாகவே இருப்பார் என விமர்சித்துள்ளார். சித்து பஞ்சாப் தேர்தல் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிபிசிசி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் விருப்பத்திற்கு அடிப்பணிந்ததாக காங்கிரஸை விமர்சித்த கேப்டன் அமரீந்தர் சிங், எந்தவொரு சுயமரியாதை உள்ள தலைவரும் இதுபோன்ற அவமானத்தை ஏற்க கூடாது என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பிற்கான காங்கிரஸ் தேர்தல் கமிட்டியின் தலைவராக சித்து நியமிக்கப்பட்ட பின், சன்னி அதில் ஒரு உருப்பினராக சேர்க்கப்பட்ட பிறகு கேப்டன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். பிபிசிசி தலைவருக்கு அடிபணிந்து ஒருவர் முதலமைச்சர் ஆனது முன்னெப்போதும் இல்லாதது என கேப்டன் கூறியுள்ளார்.
2022 தேர்தலில் சித்துவுக்கு பின்னால் காங்கிரஸை கொண்டுவரவும், முதல்வர் சன்னியை பின் இருக்கைக்கு மாற்றவும் முடிவு செய்து இருப்பதாக தற்போதைய வளர்ச்சி இருப்பதாக கூறினார். சுயமரியாதையுள்ள எந்த தலைவரும் இதுபோன்ற அவமானத்தை ஏற்க கூடாது எனவும், இது போன்ற அவமானங்களை எதிர்கொள்வதை விட சன்னி பதவி விலக வேண்டும் என கேப்டன் பரிந்துரைத்துள்ளார்.
Also Read: பாஜகவில் இணைந்தார் மஞ்சிந்தர் சிங் சிர்சா.. அதிர்ச்சியில் சிரோமணி அகாலி தளம்..
பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமித்ததாக காங்கிரஸ் கூறியது, ஆனால் தற்போது அவரை பிபிசிசி தலைவருக்கு அடிமையாக ஆக்கி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். மேலும் எஸ்சி வாக்குகளை பெறுவதற்காக அவர் என்ன காட்சி பொருளா என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் சன்னி இறுதியில் இரவு காவலாளியாகவே இருப்பார் என விமர்சித்துள்ளார்.
இந்த தேர்தல் கமிட்டியில் சுனில் ஜாகர், பர்தாப் சிங் பஜ்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 117 இடங்களில் காங்கிரஸ் 77 இடங்களை பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை பிடித்து இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. சிரோமணி அகாலி தளம் 15 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் வென்றிருந்தன. இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.
Also Read: உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி.. பாஜக வாக்குகளை பிரிக்கும் சமாஜ்வாதி..