இந்து இளைஞனை திருமணம் செய்த முஸ்லிம் பெண்.. பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விருப்பத்திற்கு மாறாக இந்து இளைஞனை திருமணம் செய்து கொண்ட 17 வயது முஸ்லிம் சிறுமியின் கோரிக்கையை ஏற்று தம்பதியினருக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருவ வயதை அடைந்த ஒரு முஸ்லிம் பெண் தன் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ள சுதந்திரம் உள்ளது எனவும், இதில் அவரது பாதுகாவலர்கள் தலையிட உரிமை இல்லை என உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஹர்னரேஷ் சிங் கில் அமர்வு விசாரித்தது.

முஸ்லிம் பெண்ணின் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சர் தீன்ஷா ஃபர்துஞ்சி முல்லாவின் முகமதிய சட்டத்தின் கொள்கைகள் என்ற புத்ககத்தின் 195வது பிரிவின்படி, மனுதாரர் எண்.1 (பெண்) 17 வயதுடையவராக இருப்பதால் அவர் விருப்பப்பட்ட ஒருவருடன் திருமணம் செய்துகொள்ள தகுதியானவர்.

மனுதாரர் எண்.2 பெண்ணின் கணவருக்கு 33 வயது என கூறப்படுகிறது. எனவே மனுதாரர் எண்.1 முஸ்லிம் தனிநபர் சட்டத்தால் எதிர்பார்க்கப்படும் திருமண வயதை அடைந்து விட்டார் என்ற முஸ்லிம் சட்டத்தை நீதிபதி கவனித்தார். மனுதாரரின் வாதத்தின்படி, முஸ்லிம் சட்டத்தின் படி, 15 வயதில் ஒரு நபர் பெரும்பான்மையை அடைகிறார் என்ற அனுமானம் இருப்பதாக வாதாடினார்.

Also Read: லட்சத்தீவில் மத அடிப்படையில் இருந்த அரசு விடுமுறை வெள்ளிகிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை என மாற்றம்..?

மேலும் பருவ வயதை அடையும் ஒரு முஸ்லிம் ஆணோ அல்லது பெண்ணோ அவன் அல்லது அவள் விரும்பும் எவரையும் திருமணம் செய்துகொள்ள சுதந்திரம் உள்ளது. இதில் அவர்களின் பாதுகாவலர்கள் தலையிட உரிமை இல்லை. பிரிவு 195ன் படி, பருவமடைந்த ஒவ்வொரு முகமதியனும் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபடலாம். பருவமடைதல் இல்லாத நிலையில் 15 வயதிற்கு மேல் பருவமடைதல் என அனுமானிக்கப்படுகிறது என மனுதாரரின் தரப்பில் வாதாடப்பட்டது.

Also Read: லவ் ஜிகாத்: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி கான்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

இதனையடுத்து நீதிபதி தனது தீர்ப்பில், மனுதாரர்களின் அச்சத்தை தீர்க்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ள முடியாது. மனுதாரர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அவர்கள் பறிக்க முடியாது. மேற்கண்ட விவாதத்தை கருத்தில் கொண்டு மனுதாரர்களின் பிரதிநிதிதுவத்தை முடிவு செய்து சட்டப்படி தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Also Read: திருமண வயதை உயர்த்தும் முடிவு பெண்களுக்கு மகிழ்ச்சியும், சிலருக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி

Leave a Reply

Your email address will not be published.