27 இந்து கோவில்களை இடித்துதான் குதுப்மினார் மசூதி கட்டப்பட்டுள்ளது: கே.கே.முகமது
தலைநகர் டெல்லியில் உள்ள குதுப்மினார் குவாத்-உல்-இஸ்லாம் மசூதி கட்டுவதற்காக 27 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டதாக பிரபல தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முகமது கூறியுள்ளார். குதுப்மினார் அருகே கோவில்களின் எச்சங்கள் காணப்பட்டன. அதில் விநாயகர் கோவிலும் உள்ளது. இது அந்த இடத்தில் கோவில் இருந்ததை நிருப்பிக்கிறது என முகமது கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் 73 மீட்டர் உயரமுள்ள குதுப்மினார், டெல்லியின் கடைசி இந்து சாம்ராஜ்ஜியத்தின் தோல்விக்கு பிறகு அந்த இடத்தில் இருந்த 27 இந்து கோவில்களை இடித்து அதில் கிடைத்த பொருட்களை கொண்டு குதுப்மினார் கட்டப்பட்டுள்ளது. குவாத்-உல்-இஸ்லாம் மசூதியின் கிழக்கு வாயிலின் மேல் உள்ள கல்வெட்டு 27 கோவில்களை இடித்ததன் மூலம் கிடைத்த பொருட்களால் கட்டப்பட்டது என்பது நிருபணம் ஆகிறது.
டெல்லியின் முதல் முஸ்லிம் ஆட்சியாளரான குதாப்-உத்-தின் ஐபக், கி.பி 1200ல் குதுப்மினாரை கட்டத் தொடங்கினார். ஆனால் அவரால் அடிதளத்தை மட்டுமே கட்டமுடிந்தது. அவரது வாரிசு மேலும் மூன்று தளங்களை கட்டினார். பின்னர் 1368 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் ஐந்தாவது மற்றும் கடைசி மாடியை கட்டினார்.
Also Read: ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டரை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்..?
குவாத்-உல்-இஸ்லாம் மசூதி கட்டுவதற்காக 27 கோவில்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அரேபிய கல்வெட்டுகள் மூலம் தெளிவாக காணலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர் முகமது கூறினார். பேராசிரியர் வி பி பால் தலைமையிலான அயோத்தியின் அகழ்வாராய்ச்சி குழுவில் முகமதுவும் இருந்தார்.
அகழ்வாராய்ச்சியின் போது ஆதாரங்களை சுட்டிக்காட்டிய முகமது, உண்மையில் கோவிலில் இருந்து தூண்கள், பலகைகள் மற்றும் பிற கட்டமைப்பு கூறுகளை பயன்படுத்தி மசூதி கட்டப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டினார். குதுப்மினார் வளாகத்தில் உள்ள இரண்டு விநாயகர் சிலைகளை அடுத்த உத்தரவு வரும் வரை அகற்ற வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
Also Read: நிதி நெருக்கடியால் வீடுகள் மற்றும் தொழிற்துறைக்கான மின்சாரத்தை நிறுத்தவுள்ள பாகிஸ்தான்..?
ஏப்ரல் 13 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூடுதல் நீதிபதி நிகில் சோப்ரா, அடுத்த விசாரணை தேதி வரை தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மீண்டும் இந்த வழக்கு மே 17 அன்று விசாரணைக்கு வருகிறது.
குதுப்மினார் வளாகத்தில் உள்ள பழமையான கோவில்களை மீண்டும் கட்டவும், அங்கு இந்து சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது. கே கே முகமதுவின் இந்த அறிக்கை தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.