ரபேல் விமானங்கள் பயனற்றவை, நாட்டிற்கு தேவையானது அல்ல: ஜோரன் மிலானோவிக்

குரேசிய அதிபர் ஜோரன் மிலானோவிக் ஞாயிறு அன்று பிரான்சிடம் இருந்து 12 ரபேல் போர் விமானங்களை வாங்கிய தனது நாட்டின் முடிவை விமர்சித்தார். ரபேல் விமானங்கள் பயனற்றவை மற்றும் நாட்டிற்கு தேவையானவை அல்ல என கூறினார்.

குரேசிய அதிபர் ஜோரன் மிலானோவிக் ஞாயிறு அன்று மே தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பிரான்சிடம் இருந்து ரபோல் போர் விமானம் வாங்கிய தனது நாட்டின் முடிவை அவர் விமர்சித்து பேசினார். குரேசியா நவம்பர் 2021 ஆம் ஆண்டு பிரான்சிடம் இருந்து 12 பயன்படுத்தப்பட்ட ரபேல் போர் விமானங்களை வாங்கியது.

இந்த நிலையில் அதிபர் கூறுகையில், எங்களிடம் 12 ரபேல் போர் விமானங்கள் உள்ளது, ஆனால் வான் பாதுகாப்பு அமைப்புகள் இல்லை என கூறினார். மேலும் உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் மோதலை குறிப்பிட்ட அதிபர், இந்த போரில் விமானங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நீங்களே பார்க்கலாம் என கூறினார்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் இரண்டு JeM ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது.

ரபேல் போர் விமானங்களுக்கு பதிலாக 100 ட்ரோன்கள் அல்லது 100 விமான எதிர்ப்பு அமைப்புகளுடன் நாம் சிறப்பாக இருந்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தேவையில்லாத ஒன்றை வாங்கிவிட்டோம். அவை போருக்கு பயனற்றவை, பார்வைக்கு மட்டுமே சிறந்ததாக இருக்கும் என விமர்சித்தார்.

Also Read: குவாட் கூட்டமைப்பில் இந்தியாவிற்கு மாற்றாக தென்கொரியா..?

Leave a Reply

Your email address will not be published.