சீனா மற்றும் லாவோஸ் இடையே ரயில் சேவை.. சீன கடன் பொறியில் சிக்கியதா லாவோஸ்?

சீனாவின் யுனான் தலைநகர் கும்மிங் நகரில் இருந்து லாவோஸ் தலைநகர் வியாண்டியான் வரை ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. இரு நகரங்களுக்கு இடையே 1035 கிலோ மீட்டர் தொலைவை 10 மணி நேரத்தில் கடந்து விடலாம் என கூறப்படுகிறது.

சீனாவை போலவே லாவோஸும் ஒரு கம்யூனிஸ்ட் நாடு ஆகும். லாவோஸ் நாட்டின் நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. அந்த நாடு வியட்நாம், சீனா மற்றும் தாய்லாந்து உடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்கும் லாவோஸூக்கும் இடையே ரயில் சேவையை சீன அதிபரும் லாவோஸ் பிரதமரும் காணொளி மூலம் துவக்கி வைத்தனர்.

இந்த ரயில் சேவை மூலம் பயணிகள் மற்றும் வர்த்தக சேவைக்கும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ரயில் திட்டத்திற்கு 60 சதவீத கடனை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி கொடுத்துள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் சீன-லாவோஸ் இரயில்வே நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் 70 சதவீத பங்குகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்காக லாவோஸ் தனது பட்ஜெட்டில் 250 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளது. மேலும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி 450 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு வியட்நாம் மற்றும் ஜப்பான் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த திட்டம் மூலம் லாவோஸை சீனா கடன் வலையில் சிக்க வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வியான்டினில் இருந்து சீனாவின் போடன் வரை கடினமான மலை பகுதிகளை கொண்டவை. சாலை வழியாக சென்றால் இரண்டு நாட்கள் ஆகும். தற்போது ரயில் மூலம் பயண நேரம் மூன்று மணிநேரமாக குறைந்துள்ளது. இந்த வழியில் 75 சுரங்கங்கள் மற்றும் 167 பாலங்கள் வழியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி கூற்றுப்படி, லாவோஸ் 19.14 பில்லியன் அமெரிக்க டாலர் GDPயில் கடந்த ஆண்டு $13.3 பில்லியன் கூடுதல் கடன் அடைந்துள்ளது. பிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் கணிப்பின்படி, 2022 முதல் 2025 வரை ஆண்டுக்கு 1.16 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் செலுத்த நேரிடும் என கூறப்பட்டுள்ளது. அதில் பாதி சீனாவுக்கு செலுத்த வேண்டும்.

மே மாதத்துடன் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.2 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த 2020ல் 1.32 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்த ரயில் பாதை மூலம் சுற்றுலா அதிகரிக்கும் என லாவோஸ் நம்புகிறது. ஆனால் சீனா தனது கடன் வலையில் லாவோஸை சிக்க வைத்து விட்டது. ஏற்கனவே இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகம் மற்றும் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Also Read: பாகிஸ்தானில் இலங்கை நபரை கொன்று உடலை எரித்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு..

லாவோஸில் 3,00,000 லட்சம் சீனர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சீனர்களின் எண்ணிக்கையை அதிகரித்து லாவோஸ் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. 2019 கணக்கெடுப்பின்படி லாவோஸின் மக்கள்தொகை 7,123,205 பேர். இந்த ரயில் திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த ரயில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. பொடேன் முதல் வியான்டியன் வரையிலான ரயில் கட்டுமான பணிகள் 2016 டிசம்பரில் தொடங்கப்பட்டது. யூக்ஸியில் இருந்து மோகன் வரையிலான கட்டுமானம் 2015 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் திட்டத்தை வியட்நாம், கம்போடியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு எதிராக களமிறங்ரும் ஐரோப்பிய யூனியன்..

இந்த கட்டுமானத்தில் சீனாவில் 11 நிலையங்களையும், லாவோஸில் 10 நிலையங்களையும் கொண்டுள்ளன. லாவோஸ் கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் அந்நாட்டின் மின்நிலையங்களை சீனா கைப்பற்றும் என கூறப்படுகிறது. இது சீனா லாவோஸ் இடையிலான முதல் ரயில் சேவை ஆகும்.

Also Read: இன்னும் 3 மாதத்தில் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும்.. டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.