வடகிழக்கு மாநில தலைநகரங்களை இணைக்க 1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ள ரயில்வே..
மணிப்பூர், மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரை 2023 ஆம் ஆண்டிற்குள்ளும், நாகாலாந்து தலைநகர் கோஹிமாவை 2026 ஆம் ஆண்டிற்குள்ளும் இணைக்கும் 21 திட்டங்களை செயல்படுத்த வடகிழக்கு எல்லை ரயில்வே(NFR) 95,261 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமின் தலைநகருக்கு அருகில் உள்ள குவஹாத்தி, திரிபுரா தலைநகர் அகர்தலா மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகருக்கு அருகில் உள்ள நஹர்லாகுன் ஆகியவை ஏற்கனவே ரயில்வே நெட்வொர்க்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு எல்லை ரயில்வே தலைமை அதிகாரி சப்யசாச்சி டி கூறுகையில், மீதமுள்ள மாநில தலைநகரங்களை இணைக்கும் தொலைநோக்கு பார்வையுடன் பிராந்தியத்தில் லைன் திறனை அதிகரிக்க ஏற்கனவே 51,787 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2009-14 ஆண்டின் சராசரி நிதி ஒதுக்கீட்டை விட கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்திற்கான ஆண்டிற்கான சராசரி நிதி ஒதுக்கிடு 254 சதவீதம் அதிகமாகும். இம்பால் மற்றும் ஐஸ்வாலை இணைக்கும் புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், கவுகாத்தி மற்றும் ஷில்லாங் இடையே பெரிய மலைகள் இல்லாததால் ஷில்லாங்கை இணைக்கும் பணியில் அதிக தடைகள் இருக்காது என சப்யசாச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 893 கிலோமீட்டர் பாதை அகல பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 386 கி.மீ புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.356 கி.மீ இரட்டை பாதைகள் இயக்கப்படுகின்றன மற்றும் 1.578 கிமீ பாதைகளின் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநில தலைநகரங்களை இணைப்பது உட்பட 21 திட்டங்களை முடிக்க இப்பகுதியில் 95,261 கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது என CPRO தெரிவித்துள்ளது.
Also Read: $10 பில்லியனுக்கு கிழே குறைந்த பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு.. கடன் வழங்குமா IMF..?
தற்போது நடைபெற்று வரும் இந்த திட்டங்கள், உள்ளுர் மக்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்கி பிராந்தியத்தின் சமூக பொருளாதார நிலப்பரப்பை மாற்றியமைத்துள்ளது. மேலும் 1,000 கோடி மதிப்பிலான இந்தியாவின் அகர்தலா மற்றும் வங்கதேசத்தின் அகௌரா இடையேயான ரயில்வே திட்டத்திற்கு 2010 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
Also Read: இதுவரை இல்லாத வகையில் 44 பில்லியன் டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்து சாதனை..
மொத்தமுள்ள 12,24 கி.மீ நீளமுள்ள இந்த ரயில் பாதையில் 5.46 கிமீ இந்தியாவின் அகர்தலாவிலும், 6.78 கிமீ வங்கதேசத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திட்டம் தொடங்கப்பட்டவுடன் வடகிழக்கு மாநில மக்கள், குறிப்பாக திரிபுரா, கொல்கத்தாவிற்கு ரயில் மூலம் செல்ல 22 மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தலாம். தற்போது திரிபுரா மக்கள் கவுகாத்தி வழியாக கொல்கத்தா செல்ல 38 மணி நேரம் ஆகிறது.
Also Read: நிதி முறைக்கேடு: விசாரணை வளையத்திற்குள் ZTE, VIVO உள்ளிட்ட சீன நிறுவனங்கள்..