உ.பி.யில் உள்ள RSS அலுவலகத்தை தகர்க்க போவதாக மிரட்டல்.. புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்முகமது கைது..

உத்திரபிரதேசத்தில் உள்ள RSS அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்த நபரை உத்திரபிரதேச போலிசார் உதவியுடன் தமிழக போலிசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தின் லக்னோ மற்றும் உன்னாவில் உள்ள RSS அலுவலகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள 4 RSS அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிய புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ் முகமது என்ற நபரை தமிழக போலிசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ மற்றும் உன்னாவில் உள்ள RSS அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, லக்னோவில் உள்ள மடியான் காவல்நிலையத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது FIR பதிவு செய்யப்பட்டது. சர்வதேச எண்களில் இருந்து இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நீலகாந்த் திவாரிக்கு இந்த வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

லக்னோ காவல்துறை கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் வந்த பிறகு FIR பதிவு செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்தவரின் எண்ணை கண்டுபிடித்து. சைபர் கிரைம் உதவியுடன் அந்த நபர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தமிழக காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Also Read: முகமது நபி தொடர்பாக இந்தியா மன்னிப்பு கேட்க தேவையில்லை: கேரள ஆளுநர் ஆரிப்கான்

பின்னர் தமிழக காவல்துறையினர் ராஜ் முகமதுவை கைது செய்தாக உத்திரபிரதேச போலிசார் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ராஜ் முகமது உத்திரபிரதேச காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தமிழக போலிசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஜம்மு காஷ்மீர் இல்லாமல் இந்திய வரைபடம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஜி7 நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.