இந்திய நிதியின் கீழ் கட்டப்பட்ட 12 அதிவேக ரோந்து படகுகளை வியட்நாமிடம் ஒப்படைக்கிறார் ராஜ்நாத்சிங்..

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்த மாதம் 8 முதல் 10 ஆம் தேதி வரை வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் இருதரப்பு பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மூன்று நாள் பயணமாக புதன்கிழமை வியட்நாம் செல்கிறார். அங்கு ஜெனரல் ஃபான் வான் ஜியாங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ராஜ்நாத்சிங் நடத்துவார். பின்னர் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு அமைச்சர்களும் மதிப்பாய்வு செய்யவுள்ளனர். பின்னர் வியட்நாம் ஜனாதிபதி நுயென் சுவான் பூக் மற்றும் பிரதமர் பாம் மின் சின் ஆகியோரை ராஜ்நாத்சிங் சந்திக்கிறார்.

மேலும் இந்திய அரசின் 100 மில்லியன் டாலர் பாதுகாப்பு கடனின் கீழ் கட்டப்பட்ட 12 அதிவேக ரோந்து படகுகளை ஒப்படைக்கும் விழாவில் ராஜ்நாத்சிங் தலைமை தாங்குகிறார். பின்னர் நா ட்ராங்கில் உள்ள வியட்நாமின் பயிற்சி நிறுவனங்களையும் அவர் பார்வையிடுகிறார். இதில் தொலைதொடர்பு பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவிடம் இருந்து 5 மில்லியன் மானியத்துடன் ராணுவ மென்பொருள் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்கியமான நாடான வியட்நாம், தென்சீனக்கடல் பகுதியில் சீனா உடன் மோதல் போக்கை கொண்டுள்ளது. தென்சினக்கடல் முழுவதையும் சீனா உரிமை கொண்டாடி வருவதால், வியட்நாம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் தென்சீனக்கடலில் உள்ள வியட்நாம் கடல் பகுதியில் இந்தியா எண்ணெய் ஆய்வு திட்டங்களை கொண்டுள்ளது.

இந்தியா – வியட்நாம் இராஜதந்திர உறவுகளை நிறுவி 50 ஆண்டுகள் மற்றும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வரலாற்று சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சரின் வருகை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் விரிவான மூலோபாய கூட்டாண்மையையும் மேலும் பலப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: எண்ணெய் மற்றும் உணவு நெருக்கடி.. ரஷ்யா மீதான தடையை நீக்கும் ஐரோப்பிய யூனியன்..?

கடந்த 2007 ஆம் ஆண்டு வியட்நாமின் அப்போதைய பிரதமர் நிகுயென் டான் டங் இந்தியாவிற்கு வருகை தந்தார். 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி வியட்நாம் பயண்த்தின் போது இருதரப்பு உறவுகள் மேலும் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மைக்க உயர்த்தப்பட்டது. இந்தியாவின் இந்தோ-பசுபிக் பார்வையில் வியட்நாம் ஒரு முக்கிய நட்பு நாடாக மாறியுள்ளது.

Also Read: சீனாவுக்கு எதிராக இஸ்ரேலிடம் இருந்து சைபர் தொழிற்நுட்பத்தை வாங்க உள்ள இந்தியா..?

கடந்த வாரம் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் சவுரப் குமார், 12வது சுற்று அரசியல் ஆலோசனை மற்றும் 9வது மூலோபாய உரையாடலுக்காக வியட்நாம் சென்றார். மேலும் வியட்நாமின் விமான நிறுவனமான வியட் ஜெட், மும்பையில் இருந்து வியட்நாமின் தலைநகர் ஹனோய் மற்றும் வர்த்தக நகரம் ஹோ சி மின் நகரத்துக்கு நேரடி விமான சேவையை துவக்கியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே டெல்லியில் இருந்தும் விமான சேவையை இயக்கி வருகிறது.

Also Read: ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்.. சீனாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.