வியட்நாம் செல்லும் அமைச்சர் ராஜ்நாத்சிங்.. பிரமோஸ் ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்து..?

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே தூதரக உறவுகளை நிறுவியதன் பொன்விழா கொண்டாட்டத்திற்காக வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு செல்லவுள்ளார்.

அப்போது பிரமோஸ் ஏவுகணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பிலிப்பைன்ஸ் பிரமோஸ் ஏவுகணையை வாங்க நிதி ஒதுக்கியுள்ளது. இவ்விரு நாடுகளை தவிர மலேசியா, தைவான், புரூனே போன்ற நாடுகள் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வமாக உள்ளன.

இந்நாடுகளுக்கு இடையான கடல்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் சீனாவை எதிர்கொள்ளும் விதமாக பிரமோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்த நாடுகள் வாங்க் உள்ளன. பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமிற்கு பிரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதன் மூலம் பாதுகாப்பு ஏற்றுமதி சந்தையில் விரைவில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலை பெற வாய்ப்பு உள்ளது.

பிலிப்பைன்ஸின் பட்ஜெட் மேலாண்மை துறையின் அறிக்கையின் படி, டிசம்பர் 27 திங்களன்று 189 கோடி மற்றும் 224 கோடி மதிப்புள்ள இரண்டு சிறப்பு பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை கையகப்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரமோஸ் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஒரு சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

Also Read: எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய இராணுவம்..

பிரமோஸ் ஏவுகணை தவிர பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ஆறு ரோந்து கப்பல்கள் 600 மில்லியனுக்கும், ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து இரண்டு கொர்வெட்டுகளை 550 மில்லியனுக்கும் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்த பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது.

Also Read: மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை ரகசியமாக கடலில் இறக்கிய இந்திய கடற்படை..

பிரமோஸ் ஏவுகணையானது நீர்மூழ்கி கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவுக்கூடிய உலகின் அதிவேக சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை ஆகும். இது 2.8 வேகத்தில் அல்லது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்க கூடியது. இதன் தாக்குதல் தூரம் 290 கிலோ மீட்டர் ஆகும். 2025 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

Also Read: DRDO உடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை AMCA போர் விமானத்தை உருவாக்கி வரும் HAL..

Leave a Reply

Your email address will not be published.