ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. எச்சரித்த தாலிபான்..

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து தாலிபான் அரசு சனிக்கிழமை பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள், ஒரு பெண் உயிரிழந்தனர் மற்றும் ஒரு ஆண் படுகாயமடைந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தாலிபான் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹெட் தெரிவித்துள்ளார்.

மேலும், மிருகத்தனமான தாக்குதல்களை கடுமையாக கண்டிப்பதோடு இதுபோன்ற பிரச்சனைகளில் ஆப்கானியர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அண்டை நாடுகளுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தக்கூடும் என தாலிபான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

போர் தொடங்கினால் அது எந்த தரப்புக்கும் சாதகமாக இருக்காது என்பதை பாகிஸ்தான் தரப்பு அறிந்து கொள்ள வேண்டும், இது பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் என தாலிபான் கூறியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Also Read: மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு.. 3 பயங்கரவாதிகளிடம் இருந்து 12 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்..

கடந்த வியாழன் அன்று ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் இராணுவம் கூறுகையில், தெக்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானின் இஷாம் பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுருத்தலை ஒழிப்பதில் பாகிஸ்தான் ராணுவம் உறுதியாக உள்ளது என பாகிஸ்தான் இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Also Read: நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் 77 சதவீதமும், உயிரிழப்பு 85 சதவீதமும் குறைந்துள்ளது..!

ஜனவரி முதல் ஆப்கானிஸ்தானின் எல்லையில் 128 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதேநேரம் கிட்டதட்ட 100 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரிப், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நினைத்து பாகிஸ்தான் இராணுவம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆப்கானிஸ்தான் மக்களும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.