சீனாவுக்கு எதிராக சோலார் பேட்டரி சந்தையில் களமிறங்க உள்ள ரிலையன்ஸ் நிறுவனம்..

ரிலையன்ஸ் இன்டஸ்டீரீசின் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனம், ஒரு பேட்டரி தொழில்நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரேடெக் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ரத்னாதிப் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார்.

தற்போது உலக அளவில் பேட்டரி சந்தையை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. தற்போது பேட்டரி சந்தையை கைப்பற்றும் நோக்கில் முகேஷ் அம்பானியின் சோலார் எனர்ஜி நிறுவனம் சூரிய தொகுதிகள், செல்கள், செதில்கள், பேனல்கள் மற்றும் பேட்டரி ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.

சோலார் பேட்டரி பற்றி தெரிந்த பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சீனாவில் தான் உள்ளனர். இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் ஐரோப்பாவில் உள்ள நிறுவனத்துடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் நார்வேயில் உள்ள சோலார், பேனல், செல் மற்றும் பாலிசிலிகான் தயாரிப்பு நிறுவனமான REC சோலார் ஹோல்டிங்க்ஸ் AS நிறுவனத்தை 771 மில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் நார்வேயில் இருந்தாலும் சீனாவின் இரசாயன பொருட்களை தயாரிக்கும் சீனா நேஷ்னல் ப்ளூஸ்டார் நிறுவனத்திற்கு சொந்தமானது.

Also Read: கதி சக்தி: அமெரிக்காவில் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு..!

மேலும் தொழிற்நுட்ப மேம்பாட்டுக்காக டென்மார்க்கின் ஸ்டைஸ்டால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொzzzzள்ள உள்ளது. தற்போதுள்ள கார்கள், செல்போன் என பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பேட்டரி முக்கியமானது. இதனால் பேட்டரி சந்தையை சீனாவிடம் இருந்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பேட்டரி சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.

Also Read: இந்த நிதியாண்டு இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்: உலக வங்கி

இந்த சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வைக்க முடியும். சீனாவிற்கு வெளியே உள்ள ஒரே பேட்டரி நிறுவனம் REC என கூறப்படுகிறது. மற்ற நாடுகளை விட சீனா குறைவான செலவில் சோலார் பேனல்களை தயாரிப்பதால் மற்ற நாட்டு நிறுவனங்களால் ஈடுகொடுக்க முடியாமல் நிறுவனத்தை மூடிவிட்டனர். தற்போது இந்த சோலார் வணிகத்தில் முகேஷ் அம்பானி இறங்கியுள்ளார்.

Also Read: இந்தியாவின் வளர்ச்சி நிலையானது.. இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்..

Leave a Reply

Your email address will not be published.