தொடர்ந்து உயர்ந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு.. அறிக்கை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..

ஜனவரி 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.229 பில்லியன் டாலர் அதிகரித்து 634.965 பில்லியன் டாலராக உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தின் படி, ஜனவரி 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 878 மில்லியன் டாலர் குறைந்து 632.736 டாலராக இருந்த நிலையில், ஜனவரி 14 ஆம் தேதியுடன ஒப்பிடுகையில் 2.229 டாலர் அதிகரித்து 634.965 டாலராக உள்ளது.

இதற்கு முன் 2021 செப்டம்பர் 3 ஆம் தேதி அதிகபட்சமாக 642.453 பில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பானது வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (FCAs), சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs), சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நாட்டின் இருப்பு நிலை மற்றும் தங்க இருப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 1.345 பில்லியன் டாலர் அதிகரித்து 570.737 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு வரைதல் உரிமைகள் 123 மில்லியன் டாலர் அதிகரித்து 19.22 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலையும் 36 மில்லியன் டாலர் அதிகரித்து
5.238 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் தங்கம் கையிருப்பு 726 மில்லியன் டாலர் அதிகரித்து 39.77 பில்லியம் டாலராக உள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள யூரோ, பவுண்டு மற்றும் யென் போன்ற அமெரிக்க டாலர் அல்லாத யூனிட்டுகளின் மதிப்பு ஆகியவை வெளிநாட்டு நாணய சொத்துக்களில் அடங்கும். அந்நிய செலாவணி தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் கொரோனா தொற்றை பொருத்து அடுத்த வாரம் இதனை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.