ஜம்முவில் சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்யா முஸ்லிம்கள்.. திருப்பி அனுப்ப நடவடிக்கை..

ஜம்முவில் கைது செய்யப்பட்ட இரண்டு ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஜாமீன் மனுக்களை ஜம்மு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர்கள் சட்டவிரோதமாக இந்திய குடியுரிமை மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களை வெளியில் விட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தல் ஏற்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜம்முவின் கூடுதல் அமர்வு நீதிபதி, சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்யா முஸ்லிம்களான அப்துல் கபூர் மற்றும் ஆஷிகுர் ரஹ்மானிடம் ஆதார், இந்திய பாஸ்போர்ட், வங்கி கணக்குகள், பான் கார்டு ஆகியவை எப்படி வந்தது என போலிசாரிடம் கேள்வி எழுப்பினர். மேலும் அதுபற்றி விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

ஜம்மு போலிசாருக்கு பந்தி ரஹீம் நகரில் இரண்டு மியான்மர் ரோஹிங்யா முஸ்லீகள் இந்திய பூர்வகுடிமக்கள் அடையாளத்துடன் வசித்து வருவதை அறிந்த போலிசார் ரஹீம் நகருக்கு சென்று அப்துல் கபூர் மற்றிம் ஆஷிகுர் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டு சட்டம் 14-A ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடன் நடத்திய விசாரணையில் ஆஷிகுர் ரஹ்மானிடம் ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ் மற்றும் ஜம்மு காஷ்மீர் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கியினுடைய பாஸ்புக் மற்றும் ரொக்கமாக பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.

போலிசார் கூறுகையில், அவர்கள் மியான்மரை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து ஜம்மு காஷ்மீரில் வசித்து வந்துள்ளனர். இந்திய குடிமக்களாக ஆள் மாறாட்டம் செய்துள்ளனர். அவர்களிடம் ஆதார் போன்ற ஆவணங்கள் எப்படி வந்தது என சரியான காரணத்தை அவர்கள் கூறவில்லை. அவர்களிடம் விசாரித்துவருவதாக கூறினர்.

இந்த நிலையில் தான் அவர்களுக்கு ஜம்மு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. அவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கவில்லை என நீதிபதிகள் கூறினர். ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் ஏற்கனவே 220 சட்டவிரோத ரோஹிங்யாக்கள் கண்டறியப்பட்டு, அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *